கொளத்தூர் தொகுதியில் போட்டியிட மு.க.ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!

கொளத்தூர் தொகுதியில் போட்டியிட மு.க.ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!

மு.க.ஸ்டாலின்

கொளத்தூர் தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார் மு.க.ஸ்டாலின்.

 • Share this:
  தமிழக சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தார்.

  2011 ஆம் ஆண்டு தொகுதி சீரமைப்பு செய்யப்பட்டபோது, கொளத்தூர் சட்டமன்ற தொகுதி உருவாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் 2011 சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் முதல் முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து. 2016 சட்டமன்ற தேர்தலிலும் இதே தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற எதிர்கட்சி தலைவரானார்.

  இந்நிலையில் கொளத்தூர் தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிட, 2021 சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12 ஆம் தேதி தொடங்கிய நிலையில், இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தார்.

  அதன்படி, அயனாவரம் பகுதியில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலகத்திற்கு சேகர் பாபு உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுடன் வந்த மு.க.ஸ்டாலின், தேர்தல் நடத்தும் அதிகாரி தங்கவேலுவிடம் வேட்புமனு கொடுத்தார். இதனால், அங்கு மிகுந்த பாதுக்காப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.  Must Read :  கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இன்று பிரச்சாரத்தை தொடங்குகிறார் மு.க.ஸ்டாலின்

   

  இதனைத் தொடர்ந்து திறந்தநிலை வாகனத்தில், அப்பகுதி மக்களிடையே நேரடியாக குறைகளை கேட்டறிந்து தேர்தல் பிரச்சாரம் செய்யத் தொடங்கினார். இதையடுத்து,  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தொடர் பிரச்சாரம் செய்ய இருக்கிறார்.
  Published by:Suresh V
  First published:

  சிறந்த கதைகள்