மூத்த பத்திரிகையாளர் திருநாவுக்கரசு மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன் - மு.க.ஸ்டாலின்

மூத்த பத்திரிகையாளர் திருநாவுக்கரசு மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன் - மு.க.ஸ்டாலின்
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்.
  • News18
  • Last Updated: October 26, 2019, 11:32 AM IST
  • Share this:
நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் செய்தி ஒருங்கிணைப்பாளர் எஸ். திருநாவுக்கரசு மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மூத்த பத்திரிகையாளரும், நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் செய்தி ஒருங்கிணைப்பாளருமான எஸ். திருநாவுக்கரசு சென்னையில் மாரடைப்பால் நேற்று காலமானார். மந்தைவெளி தேவநாதன் தெருவில் உள்ள ரங்கா மருத்துவமனை பின்புறம் உள்ள இல்லத்தில் அவரது உடல் காலை 9 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதையடுத்து திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள எரிசினம்பட்டியில் அவரது பூர்விக கிராமத்தில் அவரது இறுதி நிகழ்ச்சி நடக்கிறது.

இந்நிலையில் அவரது மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், ‘ "நியூஸ்18 தமிழ்நாடு" தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும், மூத்த பத்திரிகையாளருமான திரு ச.திருநாவுக்கரசு அவர்கள் பணியில் இருந்த போதே திடீரென்று மறைவு எய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். கோவை, சென்னை, ஈரோடு என பல இடங்களில் பல்வேறு ஊடகத்தில் பணியாற்றிய திருநாவுக்கரசு அவர்கள் ஆற்றிய பணி சிறப்புக்குரியது. திருநாவுக்கரசுவின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தொலைக்காட்சி நிறுவனத்திற்கும், சக பத்திரிகையாளர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்


Also watch

First published: October 26, 2019, 11:28 AM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading