கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி
திருவண்ணாமலையில் தங்கமணி என்பவர் காவல்நிலையத்தில் மரணம் அடைந்தது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர்
எடப்பாடி பழனிசாமி தமிழக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்திருந்தார். அப்போது பேசிய தமிழக முதல்வர்
மு.க.ஸ்டாலின், “உடல் நலம் குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து சிறையில் இருந்த தங்கமணி மருத்துவமனைக்கு இரவு சுமார் 7.30 மணிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டு இருக்கிறார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தங்கமணி சிகிச்சை பலனின்றி இரவு சுமார் 8.40 மணி அளவில் உயிரிழந்துள்ளார். தங்கமணியின் உடல் அதே மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது நீதித்துறை நடுவர் முன்னிலையில் உடற்கூறாய்வு நடைபெற்றுள்ளது.அதன் அறிக்கை கிடைத்தவுடன் உரிய விசாரணை நடத்தப்பட்டு தெரிவிக்கப்படும் என்பதை பதிலாக எதிர்க்கட்சி தலைவருக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என்றார்.
இந்நிலையில், அது தொடர்பாக பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று விளக்கம் அளித்தார். அப்போது திருவண்ணாமலையில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவினர் தங்கமணி மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டதாக கூறினார். கைது செய்யப்பட்ட தங்கமணி முதற்கட்ட விசாரணைக்கு பிறகு கிளைச்சிறையில் அடைக்கப்பட்டதாகவும், சிறையில் ஏற்பட்ட வலிப்பு காரணமாக உயிரிழந்துள்ளார் எனவும் முதலமைச்சர் கூறினார்.
Must Read : நாட்டை ஆளப்போகும் மாணவர்களே ராஜா ராணிகள்.. நாங்கள் சிப்பாய்கள் - அமைச்சர் அன்பில் மகேஷ்
மேலும், இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டிருப்பதாகவும் நியாயமான முறையில் வழக்கு நடைபெறும் என காவல்துறையினர் கூறியதன்படி தங்கமணியின் உடலை உறவினர்கள் பெற்றுக் கொண்டிருப்பதாகவும் கூறிய முதலமைச்சர், விசாரணை அறிக்கையின் படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.