• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • அரசின் சமூகநீதி திட்டத்தை, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பாழ்படுத்துகின்றனர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அரசின் சமூகநீதி திட்டத்தை, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பாழ்படுத்துகின்றனர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அர்ச்சகர் பணியில் இருந்து யாரையும் நீக்கிவிட்டு, அந்த பணிக்கு புதியதாக யாரையும் அமர்த்தவில்லை.

  • Share this:
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தை, சமூகநீதியை அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் சிலர் வேண்டுமென்றே திட்டமிட்டு பாழ்படுத்துகிறார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சமூக சீர்திருத்த நடவடிக்கைகளை இந்து சமய அறநிலையத் துறை செய்து வருகிறது. இருப்பினும் இது குறித்து விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு விரிவாகப் பேசினால் நன்றாக இருக்கும் என ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எழிலன் கேள்வி எழுப்பினார்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது, இதில் வேண்டுமென்றே திட்டமிட்டு சிலர் சமூக ஊடகங்கள் வாயிலாக தவறான தகவல்களை பரப்பி வருவதாகவும் அமைச்சர் சேகர் பாபு பேசி முடித்தார்.

அப்போது குறுக்கிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
அற நிலைதுறை அமைச்சர் தெரிவித்தது போல நம்மை ஆளாக்கிய பகுத்தறிவு சிங்கம் பெரியார் அவரின் நெஞ்சில் தைத்த முள்ளை எடுக்க கலைஞர் ஆட்சியில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டது. அப்போதைய காலத்தில் அதனை நிறைவேற்ற முடியவில்லை.

Read More : அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசின் முடிவு தவறானது... உச்ச நீதிமன்றம் வரை செல்வேன் - சுப்பிரமணியன் சுவாமி

தற்போது அது நடைமுறைப் படுத்தப்பட்டு, பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் ஊடகத்தின் வரும் கருத்துக்களை பயன்படுத்தி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வருகின்றனர்.

Must Read : அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டம்.... கருணாநிதி செய்தது தவறு என்றால் அதே தவறை மு.க.ஸ்டாலினும் செய்வார் - அமைச்சர் சேகர் பாபு

அர்ச்சகர் பணியில் இருந்து யார் ஒருவரையும் நீக்கிவிட்டு, அந்த பணிக்கு புதியதாக யாரையும் அமர்த்தவில்லை. மேலும், இதில் தவறு நடந்திருந்தால் அது குறித்து ஆதாரப்பூர்வமாக தகவல் கொடுத்தால்  நடவடிக்கை எடுக்கப்படும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அரசியல் காழ்புணர்ச்சியுடன் சிலர் வேண்டுமென்றே, சமூகநீதியை திட்டமிட்டு பாழ்படுத்துகிறார்கள் இதை மக்கள் நன்கு அறிவர் என கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Suresh V
First published: