Home /News /tamil-nadu /

டெல்லிக்கு காவடி தூக்கப் போகவில்லை... முதல்வர் ஸ்டாலின்

டெல்லிக்கு காவடி தூக்கப் போகவில்லை... முதல்வர் ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலின்

மேலும் கலைஞர் பலமுறை திருமாவிடம் திருமணம் செய்ய கூறினார்; கலைஞர் சொல்லி திருமா செய்யாதது திருமணம் மட்டும்தான்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் 60வது பிறந்த நாளையொட்டி மணிவிழா நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த மணிவிழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    அப்போது,  திருமாவளவனின் 50 வயதில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வாழ்த்தினார், இன்று 60 வயதில் நான் வாழ்த்துகிறேன். அன்று அப்பா, இன்று மகன் வாழ்த்துகிறார், இன்னும் பல கடமைகள் உள்ளதால், அவர் நீண்ட காலம் வாழ வேண்டும் எனவும், அப்போது சட்ட கல்லூரி மாணவராக திமுகவில் சிறப்பாக செயல்பட்டார், அன்று திமுகவில் இருந்து செயல்பட்டார், இன்று கூட்டணிக்குள் இருந்து செயல்படுகிறார் என தெரிவித்தார்.

    தொடர்ந்து தம்பி உடையான் படைக்கு அஞ்ச வேண்டாம் என கூறிய அவர், கூட்டணி பற்றி கூறும் போது, இது தேர்தல் நட்பு அல்ல, கொள்கை கூட்டணி. மேலும் வெற்றிக்கு பிறகும் ஒரு தாய் பிள்ளையாக இருக்கிறோம் என தெரிவித்தார்.

    மேலும் கலைஞர் பலமுறை திருமாவிடம் திருமணம் செய்ய கூறினார்; கலைஞர் சொல்லி திருமா செய்யாதது திருமணம் மட்டும்தான் என கூறிய முதலமைச்சர், இன்றைக்கு போல 30 ஆண்டுகளுக்கு முன்பு திருமாவும் நானும் நெருக்கமாக இருந்திருந்தால், அவருக்கு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைத்திருப்பேன் என தெரிவித்தார். ஆனால், திருமாவளவன் விடுதலை சிறுத்தைகள் கட்சியையே திருமணம் செய்துகொண்டார் கட்சி தொண்டர்கள்தான் அவருக்கு பிள்ளைகள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

    டெல்லி பயணம் குறித்து பேசிய முதலமைச்சர், மாநில முதலமைச்சராக மத்திய அரசுடன் பேசி தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் தேவையான திட்டங்களை பெற வேண்டிய பொறுப்பு தனக்கு இருப்பதாக கூறினார். ஆனால், திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே எந்த உறவும் இல்லை என்று தெரிவித்தார். மேலும், ‘கட்சித் தலைவர், தமிழக முதல்வர் என்ற இரு பொறுப்புகளில் உள்ளேன்.  டெல்லிக்கு என்ன காவடி தூக்கவா போகிறேன். கை கட்டி, வாய் பொத்தி உத்தரவு என்ன என்று கேட்கா போகிறேன். கருணாநிதியின் மகன் நான்’ என குறிப்பிட்டார்.

    மேலும், திமுக அரசு திராவிட கொள்கைக்கு எந்த சமரசம் செய்ய மாட்டேன். இதனால் அதிக விமர்சனத்திற்கு நான் வந்துள்ளேன். சனாதன சக்திகளை தனிமைப்படுத்துவோம், ஜனநாயக சக்திகளை ஐக்கியப்படுத்துவோம். இதனை நானும் முன்மொழிகிறேன். இதை தான் அவரது பிறந்த நாளுக்கு அறிவிக்கிக்கும் கொள்கை பரிசு என தெரிவித்தார்.
    Published by:Raj Kumar
    First published:

    Tags: CM MK Stalin, Thirumavalavan

    அடுத்த செய்தி