• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • விவசாயம் என்றால் ஸ்டாலினுக்கு என்னவென்றே தெரியாது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

விவசாயம் என்றால் ஸ்டாலினுக்கு என்னவென்றே தெரியாது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

மு.க. ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி

மு.க. ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி

  • Share this:
    விவசாயம் என்றால் ஸ்டாலினுக்கு என்னவென்றே தெரியாது என்றும், ஒரு விவசாயி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நான்தான் நல்ல உதாரணம் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாளையொட்டி சேலம் மாநகராட்சி மைதானத்தில் தமிழக அரசின் மூன்றாண்டு சாதனையை விளக்கும் புகைப்படக் கண்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இதையடுத்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 3 கோடியே 57,000 ரூபாய் மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்காக 64 வாகனங்களையும் முதலமைச்சர் இயக்கி வைத்தார்.

    இதையடுத்து ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர், சேலத்தில் ஏர்போர்ட் போன்று பஸ் போர்ட் கொண்டு வரப்பட உள்ளதாகவும், இன்னும் ஒரு மாதத்தில் ஈரடுக்கு மேம்பாலம் திறக்கப்படும் என்றும் தெரிவித்தார். விவசாயம் என்றால் ஸ்டாலினுக்கு என்னவென்றே தெரியாது எனக்கூறிய முதலமைச்சர், ஒரு விவசாயி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு, தான் உதாரணம் என்றார்.

    திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியில்தான் தேசிய மக்கள் தொகை பதிவேடு சட்டம் கொண்டு வரப்பட்டதாகக் கூறிய அவர், என்பிஆர் குறித்து சிறுபான்மையினர் அச்சப்படத் தேவையில்லை என்றும் கூறினார்.

    நிகழ்ச்சியில் 47,072 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இதேபோல், சென்னை தண்டையார்பேட்டையில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், வரும் தேர்தலில் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனக் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் கழக அவைத்தலைவர் மதுசூதனன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை துணை முதலமைச்சர் வழங்கினார்.

    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: