உள்ளாட்சி தேர்தல் நடத்துவது பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் மற்றும் மாநகராட்சி, நகராட்சி தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவதா அல்லது இரு கட்டங்களாக நடத்துவதா என ஆலோசனை.

 • Share this:
  தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை மேற்கொண்டார்.

  சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என் நேரு, பெரிய கருப்பன், தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

  அப்போது, உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்குச்சாவடிகளை தயார் நிலையில் வைப்பது உள்ளிட்ட அரசு சார்ந்த பணிகளை விரைவுபடுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

  Must Read : பெகாசஸ் மென்பொருள் மூலம் சீமான் செல்போன் உரையாடல் ஒட்டு கேட்கப்பட்டதா?

  மேலும், விடுபட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் மற்றும் மாநகராட்சி, நகராட்சி தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவதா அல்லது இரு கட்டங்களாக நடத்துவதா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

  தமிழகத்தில் புதிய மாவட்டங்களாக, பிரித்து உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், நெல்லை, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் வார்டு மறுவரை உள்ளிட்ட பல்வேறு பணிகள் காரணமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருந்தது.

  மற்ற 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டு பஞ்சாயத்து வார்டு உறுப்பினர், கிராம பஞ்சாயத்து தலைவர், ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனிடையே ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களில் தேர்தல் நடத்தப்பட உள்ளது.
  Published by:Suresh V
  First published: