Home /News /tamil-nadu /

சந்தேகம் எழுப்பினோம்... பொய்யான குற்றச்சாட்டை கூறுகின்றனர்...! மு.க ஸ்டாலின்

சந்தேகம் எழுப்பினோம்... பொய்யான குற்றச்சாட்டை கூறுகின்றனர்...! மு.க ஸ்டாலின்

  • News18
  • Last Updated :
    உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடாது என்ற எண்ணத்தில் தான் தமிழக அரசு செயல்படுகிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

    சென்னை கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அனிதா அச்சிவர்ஸ் அகாடமி செயல்பட்டு வருகின்றது. இங்கு படித்த 128 மாணவர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய விலையில்லா மடிக் கணினியை அத்தொகுதி எம்.எல்.ஏ.வும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மு.க. ஸ்டாலின், உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்பதை திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக தெரிவித்தார்.

    உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் இந்த தருணத்தில் பிரிக்கப்பட்ட புதிய மாவட்டங்களில் இருந்து பேரூராட்சி, ஊராட்சித் தலைவர்கள் எவ்வாறு தேர்வு செய்யப்பட உள்ளனர் என்ற சந்தேகத்தை தான் திமுக எழுப்பியதாக குறிப்பிட்ட மு.க.ஸ்டாலின், அதற்கு பதிலளிக்காமல் அதிமுக வேண்டுமென்றே பொய்யான குற்றச்சாட்டை கூறி வருவதாக சுட்டிக்காட்டினார்.

    Also see...
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: ADMK, DMK, Local Body Election 2019

    அடுத்த செய்தி