• HOME
 • »
 • NEWS
 • »
 • tamil-nadu
 • »
 • ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ - எதிர்க்கட்சியை விமர்சித்த மு.க.ஸ்டாலின்

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ - எதிர்க்கட்சியை விமர்சித்த மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

என் மீது சொல்லப்பட்ட பழிகள், அவமானங்கள் மேலும் உழைக்க உந்துகின்றன என்றார் மு.க.ஸ்டாலின்.

 • Share this:
  தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சரின் மு.க.ஸ்டாலின் பேசுகையில், பிப்ரவரி 26 முதல் மே மாதம் 6ஆம் தேதி வரையிலான ஆட்சியை அதிமுகவினர் மறந்துவிட்டனரா..? என்று கூறி, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்பதுபோல் கொரோனோ பரவலைத் தடுக்க போதிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று கூறி விமர்சித்தார்.

  முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகையில், திமுக ஆட்சி நீதிக்கட்சியின் தொடர்ச்சியாக இருக்கும், கடந்த இரண்டு நாட்கள் இந்த அவையில் நடந்த விவாதத்தில் 22 உறுப்பினர்கள் ஆளுநர் உரை மீது கருத்து தெரிவித்தனர். அதை நான் ஆலோசனையாக எடுத்துகொள்கிறேன். அரசு செயல்படுத்த இருக்கும் திட்டங்களை ஆளுநர் உரையில் அடக்கி விட முடியாது. ஆளுநர் உரை முன்னோட்டம் தான்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  தேர்தல் அறிக்கையில் திமுக 505 வாக்குறுதிகள் அளித்தோம். ஆட்சி பொறுப்பேற்று 49 நாட்களில் அனைத்து வாக்குறுதிகளையும் நாங்கள் நிறைவேற்றுவோம் என எங்கள் மீது எதிர்கட்சி தலைவர் நம்பிக்கை வைத்ததற்கு நன்றி. உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் 75 ஆயிரத்து 546 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை இலவசம் என்ற அறிவிப்பால் 20 ஆயிரத்து 500 பேர் பயனடைந்துள்ளனர்.

  நாங்கள் ஆட்சிக்கு வரும் போது கொரோனா படுக்கைகள் இல்லை, ஆக்சிஜன் இல்லை. தற்போது இல்லை, இல்லை எற்கிற சொல்லை இல்லாமல் செய்திருக்கிறோம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தனது பதவி முடிந்தது போல எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார். அதன் பின் அவர் எந்த அரசுப்பணியும் பார்க்கவில்லையா?

  மார்ச் 6ஆம் தேதியில் இருந்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து விட்டது. மார்ச் மாதம் இறுதியில் இருந்து கொரோனா இரண்டாம் அலை தொடங்கி விட்டதாக கூறப்பட்டது. அதிமுக அரசின் மெத்தன போக்கால்தான் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்தது. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் திரைப்படத்தை போல பிப்ரவரி 26 முதல் மே 6ஆம் தேதி வரையிலான ஆட்சியை அதிமுகவினர் மறந்துவிட்டனரா..? கொரோனாவுக்கு பின்னர் மக்கள் அனைவரும் மருத்துவர்களாகிவிட்டனர்.

  அடக்கப்பட்ட யானைக்கு தான் மணி கட்டுவார்கள், திமுக அடக்கமுடியாத யானை. யானைக்கு 4 கால்கள் தான் பலம். அது போல திமுகவுக்கு சமூகநீதி, மொழிபற்று, சுயமரியாதை, மாநில உரிமை போன்ற 4 கொள்கைகள்தான் பலம். கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளிலும் சிறப்பு மருத்துவ மையங்கள் அமைக்கப்படும். வளர்ச்சியில் பின்தங்கி உள்ள வட மாவட்டங்களான செய்யாறு, திண்டிவனத்தில் 22 ஆயிரம் வேலை வாய்ப்புகளை உருவாக்க தொழிற்சாலைகள் அமைக்கப்படும்.

  Must Read : ‘தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் இந்தியாவுக்கு செல்லுங்கள்’ பிலிப்பைன்ஸ் அதிபரின் பேச்சால் சர்ச்சை

  ஊடகங்கள் மீதான வழக்குகள், கூடங்குளம், ஹைட்ரோ கார்பன் 8 வழி சாலை திட்டத்திற்கு எதிராக போராடியவர்களுக்கு எதிரான வழக்குகள் அனைத்தும் திரும்ப பெறப்படும். பழைய சமத்துவபுரங்கள் சீரமைப்படும், புதிய சமத்துவபுரங்கள் அமைக்கப்படும். 100 கோடி ரூபாய் செலவில் கோயில்கள் சீரமைக்கப்படும். என் மீது சொல்லப்பட்ட பழிகள், அவமானங்கள் மேலும் உழைக்க உந்துகின்றன. தலைவரின் மகன் என நான் பகட்டு காட்டியதில்லை.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Suresh V
  First published: