ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த புகார்கள் : மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த புகார்கள் : மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

பொங்கல் பரிசு

பொங்கல் பரிசு

Pongal gift : காலை 11 மணிக்கு நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் அதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 11 மணிக்கு நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் அதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளனர்.

பொங்கல் பண்டிகைக்கான ரேஷனில் 20 வகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு ஒரு பையில் வழங்கப்பட்டது. இந்தப் பொருட்களின் எடை சரியாக இல்லை என்றும் பொருட்கள் தரமற்றதாக இருந்தது, பை வழங்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. பொங்கல் தொகுப்பில் வழங்கப்பட்ட புளியில் பல்லி இருந்ததாகவும் வீடியோ வெளியானது.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் போன்றோரும் இது தொடர்பான பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தனர்.

Must Read : சோதனையில் நகை, பணம், பொருள் எதுவும் கைப்பற்றப்படவில்லை - கே.பி.அன்பழகன்

ஆனால் விஷமத்தனமான தகவல்களை சிலர் பரப்புவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்திருந்தார். இருப்பினும் புகார்கள் தொடர்ந்த நிலையில், இன்று இதுகுறித்து அவர் ஆலோசிக்க உள்ளார்.

First published:

Tags: MK Stalin, Pongal Gift