ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பிரிட்டன் பிரதமரானார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

பிரிட்டன் பிரதமரானார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

ஸ்டாலின் - ரிஷி சுனக்

ஸ்டாலின் - ரிஷி சுனக்

பிரிட்டன் பிரதமராகும் ரிஷி சுனக்கிற்கு தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பிரிட்டன் நாட்டில் கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சி நடத்தி வரும் நிலையில், நாடு பெரும் பொருளாதார நெருக்கடி எதிர்கொண்டு வருகிறது. சொந்த கட்சியில் அழுத்தம் காரணத்தினால் போரிஸ் ஜான்சன் பதவி விலகியதை அடுத்து உள்கட்சி தேர்தல் நடைபெற்றது. அதில் லிஸ் டிரஸ் மற்றும் ரிஷி சுனக் நின்ற நிலையில், லிஸ் டிரஸ் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் நிலவும் பொருளாதார சிக்கலை சமாளிக்க முடியாமல் ஆட்சிக்கு வந்து 45 நாட்களிலேயே லிஸ் டிரஸ் ஆட்சியில் இருந்து ராஜினாமா செய்தார்.

  அதனையடுத்து ஆளும் கட்சியின் புதிய பிரதமருக்கான போட்டி பரபரப்பான நடைபெற்றது. அதில் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் கட்சியின் அதிக ஆதரவைப் பெற்று கட்சியின் தலைவராகவும் பிரதமராகவும் தேர்வாகினார்.

  இந்நிலையில் இன்று அவரை பிரிட்டன் மன்னர் சார்லெஸ் ரிஷி சுனக்-ஐ புதிய பிரதமராக நியமித்தார்.

  இதைத்தொடர்ந்து இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் இந்திய பிரதமர் மோடி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளோட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

  இந்நிலையில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கிற்கு தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கிற்கு வாழ்த்துகள், நீங்கள் பிரதமர் அலுவலகத்திற்கு நீங்கள் செல்வது பன்முகத்தன்மைக்கான வெற்றியாகும். மேலும் இது இந்தியா-இங்கிலாந்து உறவுகளை மேலும் வலுப்படுத்த உதவும் என்று நம்புகிறேன்’ என பதிவிட்டுள்ளார்.

  Published by:Lakshmanan G
  First published:

  Tags: CM MK Stalin, Rishi Sunak