• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது தடுப்பூசி தொடர்பாக குழப்பத்தை ஏற்படுத்தியவர் மு.க.ஸ்டாலின்: ஆர்.பி.உதயகுமார்

எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது தடுப்பூசி தொடர்பாக குழப்பத்தை ஏற்படுத்தியவர் மு.க.ஸ்டாலின்: ஆர்.பி.உதயகுமார்

ஆர்.பி.உதயகுமார்

ஆர்.பி.உதயகுமார்

அதிமுக ஆட்சி காலத்திலேயே  தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று அறிவித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் எடப்பாடி பழனிச்சாமி என ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

  • Share this:
    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே செக்கானூரணி அரசு மருத்துவமனையில் முன்னாள் அமைச்சரும், திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி.உதயகுமார், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் ஆகியோர் தடுப்பூசி போடும் பணிகளை ஆய்வு செய்தனர்.

    அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், “தற்போது தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் திருமங்கலம், உசிலம்பட்டி ஆகிய பகுதிகளில் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது ஆகவே மதுரை மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளுக்கும் தட்டுப்பாடின்றி தடுப்பூசிகள் கிடைக்க வேண்டும்.

    சுகாதாரத்துறை அமைச்சர் தடுப்பூசி எத்தனை பேருக்கு போடப்பட்டுள்ளது என்ற கணக்கை காட்டுவதை காட்டிலும் இன்னும் எத்தனை பேருக்கு தடுப்பூசி போட வேண்டும் எனற கணக்கை கருத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவிலே தடுப்பூசி கண்டுபிடிக்காத காலத்திலே தடுப்பூசி மருந்து கண்டுபிடித்தவுடன் தமிழகத்தில் அனைத்து மக்களுக்கும் இலவசமாக தடுப்பூசிபோடப்படும் என்று அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி அதேபோல் செயல்படுத்தியும் காட்டினர்.

    ஆனால் அதே காலகட்டத்தில் அன்றைக்கு எதிர்க்கட்சி தலைவராக இருந்த இன்றைய முதலமைச்சர் ஸ்டாலின் தடுப்பூசி தொடர்பாக ஐயப்பாடான அறிக்கையை ஏற்படுத்தி அதில் குழப்பம் ஏற்படுத்தினார். ஆனால் அதற்கு அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு போதிய விழிப்புணர்வை வழங்கினார் என்பதை அமைச்சருக்கு நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

    நம் நாட்டின் குழந்தைகளின் எதிர்காலம் ஒளிமயமாக அமைய வேண்டுமென்று பல்வேறு கல்வியிலும், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த வேளையில், தற்போது அசுரவேகத்தில் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்து ஆதரவின்றி தவித்திடும் குழந்தைகளுக்கு மத்திய அரசின் சார்பில் தலா 10 லட்சம் ஒதுக்கீடு செய்வதாக மாண்புமிகு பாரத பிரதமர் அறிவித்து உள்ளார். பாதுகாப்பான அறிவு சார்ந்த இளைய சமுதாயத்தை உருவாக்குவதற்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக அமையும். வருங்காலத்தில் ஆதரவற்ற குழந்தைகள் இந்திய திருநாட்டில் இல்லை என்ற நிலையை உருவாக்குவதற்கு கொரோனா தொற்றால், பெற்றோர் ஆதரவை இழந்த ஒவ்வொரு குழந்தை பெயரில் பி.எம்.கேர்ஸ் நிதிலிருந்து குழந்தைக்கான பி.எம்.கேர்ஸ் என்ற திட்டத்தின் கீழ் 10 லட்சம் ஒதுக்கப்படும். அவர்களுக்கு 23 வயது பூர்த்தியான பின் 10 லட்ச ரூபாய் மொத்தமாக அவர்களுக்கு வழங்கப்படும்.

    Read More:   கொரோனாவால் உயிரிழந்தவரின் சடலத்தை ஆற்றில் தூக்கி எறியும் அதிர்ச்சி வீடியோ!

    அதேபோல் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அருகில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளிகள் அல்லது தனியார் பள்ளிகளில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். தனியார் பள்ளியில் குழந்தைகள் சேர்க்கப்பட்டால் கல்வி கட்டணம், சீருடை, புத்தகம் உள்ளிட்ட அனைத்து செலவுகளும் பி.எம்.கேர்ஸ் நிதியிலிருந்து வழங்கப்படும். அதேபோல் 18 வயது முடிந்த பின் உயர் கல்வி கற்பதற்கு கல்விக் கடன் வழங்கப்படும் அதற்குரிய வட்டி பி.எம்.கேர்ஸ் நிதியில் இருந்து செலுத்தப்படும்.

    Read More:   மு.க. ஸ்டாலின் கோவை பயணம்: Go Back Stalin இந்திய அளவில் ட்ரெண்ட்!

    பெற்றோர் ஆதரவை இழந்த குழந்தைகள் அனைவரும் ஆயுஷ்மான் பாரத், பிரதம மந்திரி ஆரோக்யா ஆகிய திட்டங்கள் மூலம் சேர்க்கப்பட்டு அவர்கள் பெயரில் 5 லட்ச ரூபாய் சுகாதார காப்பீடு செய்யப்படும் அவர்களுக்கு 18 வயது ஆகும்வரை காப்பீட்டுக்கான பிரீமியம் தொகை பி.எம்.கேர்ஸ் நிதிலிருந்து வாங்கப்படும் என்று பாரதப் பிரதமர் அறிவித்துள்ளார்.

    அதேபோல் தமிழக அரசின் சார்பில் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்து ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு மாதம் தோறும் உதவித் தொகை மற்றும் அவர்கள் பெயரில் தலா 5 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். நாட்டின் இளைய சமுதாயத்தின் எதிர்காலத்தின் மீது அக்கறை கொண்டுள்ள அனைவருக்கும் மகிழ்ச்சி அறிவிப்பாக அமைந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

     

    மதுரை திருமங்கலம் செய்தியாளர் சிவக்குமார்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Arun
    First published: