• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • டாஸ்மாக் கடைகள் திறப்புக்கு எதிர்ப்பு; மு.க.ஸ்டாலின் குடும்பத்தினருடன் கருப்பு சட்டை அணிந்து போராட்டம்..!

டாஸ்மாக் கடைகள் திறப்புக்கு எதிர்ப்பு; மு.க.ஸ்டாலின் குடும்பத்தினருடன் கருப்பு சட்டை அணிந்து போராட்டம்..!

TASMAC | MK Stalin | மு.க.ஸ்டாலின்,சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட்டார்.

  • Share this:
    தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறப்பிற்கு கண்டனம் தெரிவித்து திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் கருப்பு சின்னத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. சென்னையில், மு.க.ஸ்டாலின், கருப்புச் சட்டை அணிந்து தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.

    ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் அடைக்கப்பட்டிருந்த டாஸ்மாக் மதுபானக் கடைகள், சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் இன்று திறக்கப்பட்டுள்ளன. ஆனால், டாஸ்மாக் கடையை திறப்பதால் கொரோனா தொற்று அதிகரிக்கும் சூழல் ஏற்படும் என்று எதிர்க்கட்சிகள் கூறி வந்தன. அத்துடன், எதிர்க்கட்சியான திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் டாஸ்மாக் கடை திறப்பிற்கு எதிராக, கருப்பு சின்ன போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தன.

    இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட்டார். அவர், கருப்பு சட்டை அணிந்தும், கருப்பு கொடி ஏந்தியும், தனிமனித விலகலை கடைப்பிடித்தவாறு, கண்டனக் குரல் எழுப்பினார். அவருடன், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் கலந்து கொண்டார்.



    டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதை கண்டித்து இந்திய கம்யுனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில், திமுக, உள்ளிட்ட கூட்டணி கட்சியினர், நாகை KCP நகரில் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதேபோன்று, கடலூர் மாவட்டம் கீரப்பாளையத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, டாஸ்மாக் மதுபானக் கடை திறப்புக்கு எதிராக கண்டனக் குரல் எழுப்பப்பட்டது.













    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: