தமிழ்நாட்டில் வேலை பார்த்துக்கொண்டு இவ்வளவு ஆணவமா? - இந்தி தெரியாததால் லோன் தர மறுத்த விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

இந்தி மொழி வெறி எண்ணெய் ஊற்றி வளர்த்தெடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டுக்கு வேலை பார்க்க வந்த ஒருவருக்கு இவ்வளவு ஆணவமா? என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் வேலை பார்த்துக்கொண்டு இவ்வளவு ஆணவமா? - இந்தி தெரியாததால் லோன் தர மறுத்த விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
  • News18 Tamil
  • Last Updated: September 22, 2020, 1:55 PM IST
  • Share this:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற தலைமை அரசு மருத்துவர் பாலசுப்பிரமணியன். இவர் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து கடைசியாக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது சொந்த ஊர் கங்கைகொண்ட சோழபுரம் அருகே உள்ள யுத்தப்பள்ளம். இவருக்கு இந்த யுத்தப்பள்ளம் ஜெயங்கொண்டம் ஆகிய பகுதிகளில் பல்வேறு இடங்களில் சொந்த நிலம் வீடு ஆகியவை உள்ளது. இவர் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வங்கி கணக்கு வைத்து வரவு-செலவு பார்த்து வருகிறார், இந்நிலையில் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனது இடத்தில் வணிக வளாகம் கட்ட முடிவு செய்து கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு லோன் கேட்டு சென்றுள்ளார்.

வங்கியில் தற்போது மகாராஷ்டிராவைச் சேர்ந்த விஷால் பட்டேல் என்பவர் கிளை மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரிடம் சென்று பாலசுப்பிரமணியன் தனது இடம் சம்பந்தமான ஆவணங்கள், வரவு செலவு கணக்குகள் மற்றும் வருமான வரி செலுத்தும் படிவம் ஆகியவற்றை காண்பித்து கடன் கேட்டு உள்ளார்.

மருத்துவர் பாலசுப்ரமணியன்அப்போது பேசிய வங்கி மேலாளர், "Do u know Hindi" என ஆங்கிலத்தில் கேட்டுள்ளார், அதற்கு மருத்துவர் "I don't know Hindi, but i know Tamil and English" என ஆங்கிலத்தில் தெரிவித்த அவர், "I am from Maharashtra, I know Hindi. Language problem" என தெரிவித்துள்ளார். மருத்துவர் மீண்டும் தனது ஆவனத்தை காண்பித்து, தான் உங்கள் கிளையில் தான் கணக்கு வைத்துள்ளேன். என்னிடம் எல்லா ஆவணங்களும் உள்ளது என தெரிவித்த போதும் வங்கி மேலாளர் மீண்டும் மீண்டும் மொழி பற்றியே பேசி, கடன் சம்பந்தமாக எந்த ஆவணத்தையும் பார்க்காமல் கடன் கொடுக்க இயலாது என தெரிவித்ததுள்ளார். அதனையடுத்து, வங்கி மேலாளர் மீது மான நஷ்ட ஈடு கேட்டு பாதிக்கப்பட்டவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்த மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’ஜெயங்கொண்டத்தில் வாழும் ஓய்வு பெற்ற மருத்துவர் பாலசுப்பிரமணியன் உரிய ஆவணங்களுடன் கடன் கேட்டுச் சென்ற போது, ‘இந்தி தெரியாத உங்களுக்குக் கடன் தரமுடியாது’ என்று ஆணவத்துடன் கூறியிருக்கிறார், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணியாற்றும் வட இந்திய அதிகாரி.


இந்தி மொழி வெறி எண்ணெய் ஊற்றி வளர்த்தெடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டுக்கு வேலை பார்க்க வந்த ஒருவருக்கு இவ்வளவு ஆணவமா? பாஜக அரசின் பின்புலம் இதற்குக் காரணமா? எதுவாக இருந்தாலும் தமிழர் உணர்வுடன் விளையாடாதீர்கள்! சிறு பொறிகள் தீப்பிழம்பாக மாறிவிடும் பேரபாயம் உண்டு; எச்சரிக்கை’ என்று குறிப்பிட்டுள்ளார்.
First published: September 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading