• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ப.சிதம்பரம் கைது நடவடிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது - மு.க ஸ்டாலின்

ப.சிதம்பரம் கைது நடவடிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது - மு.க ஸ்டாலின்

மு.க ஸ்டாலின்

மு.க ஸ்டாலின்

"உள்ளாட்சி தேர்தல் நடத்த கூடாது என்று நாங்கள் வழக்கு போடவில்லை"

  • News18
  • Last Updated :
  • Share this:
    முன் ஜாமினுக்கு ப.சிதம்பரம் மனுதாக்கல் செய்துள்ள இடைப்பட்ட காலத்தில் மேற்கொண்டுள்ள கைது நடவடிக்கை அரசியல் உள்நோக்கத்தோடு மேற்கொள்ளப்பட்டவை என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.

    சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கூறுகையில், “டெல்லியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்படமானது காஷ்மீரில் அடைத்து வைக்கப்பட்ட அரசியல் தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனவும் தொலை தொடர்பு துண்டிப்பு நீக்கி மக்கள் வாழ்வதற்கான சுமூகமான சூழலை உருவாகவ வேண்டும் எனவும் நடைபெற்றது .திமுக அழைப்பை ஏற்று பங்கேற்ற கட்சி தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி

    சுவர் ஏறிக் குதித்து சிபிஐ அதிகாரிகள் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது இந்திய நாட்டிற்கே அவனமானமானது, இந்த செயலை நான் கண்டிக்கிறேன்.

    உள்ளாட்சி தேர்தல் நடத்த கூடாது என்று நாங்கள் வழக்கு போடவில்லை, அதை புரிந்துக்கொள்ளுங்கள். அமைச்சர் ஜெயக்குமார் ஒரு ஜோக்கர், அவருடைய கருத்துக்கெல்லாம் என்னால் பதில் கூற முடியாது.

    அரசியல் பழிவாங்கும் எண்ணத்தோடு இந்த கைது நடந்திருக்கிறது . பலமுறை விசாரணைக்கு ஆஜராகி விளக்கமளித்திருக்கிறார், தற்போது முன் ஜாமினுக்கும் மனுதாக்கல் செய்துள்ள இடைப்பட்ட காலத்தில் மேற்கொண்டுள்ள கைது நடவடிக்கை அரசியல் உள்நோக்கத்தோடு மேற்கொள்ளப்பட்டவை” என்று கூறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: