Home /News /tamil-nadu /

MK Stalin: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஒரு மாத சாதனை.. சொன்னதும்... செய்ததும்..

MK Stalin: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஒரு மாத சாதனை.. சொன்னதும்... செய்ததும்..

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சராக பதவியேற்றதும் தலைமைச்செயலகம் சென்ற ஸ்டாலின், தேர்தல் பிரசாரத்தின் போது அளித்த வாக்குறுதிகளில், 5 புதிய திட்டங்களுக்கான கோப்புகளில் கையெழுத்திட்டார்.

  தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற ஒரு மாதத்திற்குள், கொரோனா நிவாரணம் 4 ஆயிரம் ரூபாய், ஆவின் பால் விலை குறைப்பு, கொரோனா பாதிப்பால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 5 லட்சம் வைப்புத் தொகை... ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லா மாநிலம் என பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

  முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்... என்று தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்று ஒரு மாதம் கடந்துள்ளது...

   

  கடந்த மே 7-ம் தேதி முதலமைச்சராக பதவியேற்றதும் தலைமைச்செயலகம் சென்ற ஸ்டாலின், தேர்தல் பிரசாரத்தின் போது அளித்த வாக்குறுதிகளில், 5 புதிய திட்டங்களுக்கான கோப்புகளில் கையெழுத்திட்டார்.

  பிரசாரத்தின் போது பொதுமக்களிடம் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது 100 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என உறுதியளித்திருந்தார். திமுக ஆட்சிக்கு வந்ததும் "உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம்" என்ற துறையை ஒதுக்கி அதற்கு ஐஏஎஸ் அதிகாரி ஷில்பா பிரபாகரை நியமித்து உத்தரவிட்டார்.

  சாதாரண நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்பது மே 8 முதல் நடைமுறைக்கு வந்தது.

  அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் கொரோனா நிவாரணமாக வழங்கப்படும் என்று முதல் கையெழுத்திட்ட முதலமைச்சர், மே 16-ம் தேதி முதல் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

  அன்றைய தினமே ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பும் நடைமுறைக்கு வந்தது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மேலும், தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொரோனா நோய்க்கு சிகிச்சை மற்றும் சிகிச்சைக்கான செலவுகளை அரசே ஏற்கும் என்ற 5 திட்டங்களையும் அரியணை ஏறிய 10 நாட்களுக்குள் நடைமுறைப்படுத்தினார்.

  திமுக ஆட்சிக்கு வந்ததும், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதே மிகப்பெரிய சவாலாக பார்க்கப்பட்டது.

  அத்துடன், ரெம்டெசிவிர் மருந்து, ஆக்சிஜன், கொரோனா படுக்கைகள் பற்றாக்குறை நிலவியதால் மே 7-ம் தேதி தமிழ்நாட்டில் ஒருநாள் பாதிப்பு 26 ஆயிரத்தை கடந்திருந்தது.

  இதை கருத்தில் கொண்டு, சட்டப்பேரவையில் பிரதிநிதித்துவம் கொண்ட 13 கட்சிகளின் உறுப்பினர்களை கொண்ட ஆலோசனை குழுவை உருவாக்கினார் ஸ்டாலின்.

  Also Read:   இந்தியாவில் இன்று முதல் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி சோதனை?

  ஒருநாள் தொற்று மே 21-ம் தேதி 36 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை எட்டியதால், மருத்துவர்கள், நிபுணர்கள், சுகாதார துறையினர், 13 கட்சியினரை கொண்ட ஆலோசனைக் குழுவின் அறிவுரைப்படி மே 24 முதல் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

  தற்போது, ஒருநாள் தொற்று பாதிப்பு 20 ஆயிரமாக குறைய இரவு பகலாக கடும் முயற்சிகளை மேற்கொண்டார்.

  அத்துடன், பாதிப்பு உள்ள கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் நேரில் ஆய்வு மேற்கொண்டு ஆக்சிஜன் வசதி கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார்.

  மத்திய அரசிடம் வலியுறுத்தி 900 டன் ஆக்சிஜன் பெற்று பாற்றாக்குறை இல்லா மாநிலமாக உருவெடுக்க செய்துள்ளார்.

  குறிப்பாக, ரெம்டெசிவிர் மருந்தை பதுக்குவோர், அதிக விலைக்கு ஆக்சிஜன் விற்பனை செய்வோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

  இதற்கிடையில் தமிழகத்தில்18 முதல் 44 வயதிற்கு இடைப்பட்டோர் தடுப்பூசி போடும் பணியை திருப்பூர் மாவட்டம், நேதாஜி ஜவுளிப் பூங்காவில் தொடங்கி வைத்தார்

  கொரோனா தடுப்பு பணி ஒருபுறம் இருக்க, ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தோரின் வாரிசுகள் மற்றும் படுகாயமடைந்தோரின் வாரிகள் 17 பேருக்கு, அவர்களின் கல்வித் தகுதிக்கேற்ப கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை, மே 21-ம்தேதி தேதி வழங்கினார்.

  பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத் துறையில் பணிபுரியும் அரசு அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்கள் கொரோனாவால் உயிரிழந்தால், அவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்தார்.

  Also Read:   இந்தியாவின் மலிவு விலை கொரோனா தடுப்பூசி: பிற தடுப்பூசிகளில் இருந்து எந்த வகையில் மாறுபட்டது?

  மேலும், கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அவர்களின் பெயரில் 5 லட்சம் ரூபாய் வைப்பீட்டு தொகை செலுத்தப்படும் என்றும், பட்டப்படிப்பு வரை அவகளுக்கான கல்விச் செலவையும் அரசு ஏற்கும் எனவும் அறிவித்தார்.

  ஜூன் 3-ம் தேதி கருணாநிதி பிறந்த நாளன்று கொரோனா நிவாரணம் இரண்டாவது தவணையாக 2 ரூபாய், குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 மளிகைப் பொருட்கள் அடுங்கிய தொகுப்பு, திருநங்கைகளுக்கும் 2 ஆயிரம் ரூபாய் கொரோனா நிவாரணம் வழங்கினார்.

  தனியார் நிறுவனங்கள், தொழிலதிபர்கள், தன்னார்வலர்களை சந்தித்து கொரோனா நிதியுதவி வழங்க கோரினார் மு.க.ஸ்டாலின். அதன்படி, இதுவரை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 186 கோடியே 15 லட்சம் ரூபாய் நிதி திரட்டியுள்ளார்.
  Published by:Arun
  First published:

  Tags: MK Stalin

  அடுத்த செய்தி