வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்துவதைத்தான் பட்ஜெட் காட்டுகிறது - மு.க ஸ்டாலின்

சங்கீத வித்துவான் போல ஓ.பன்னீர் செல்வம் சொன்னதையே சொல்லியுள்ளார் என்று தமிழக பட்ஜெட் மீது திமுக தலைவர் மு.க ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

news18
Updated: February 8, 2019, 12:55 PM IST
வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்துவதைத்தான் பட்ஜெட் காட்டுகிறது - மு.க ஸ்டாலின்
எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்
news18
Updated: February 8, 2019, 12:55 PM IST
சங்கீத வித்துவான் போல ஓ.பன்னீர் செல்வம் சொன்னதையே சொல்லியுள்ளார் என்று தமிழக பட்ஜெட் மீது திமுக தலைவர் மு.க ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மு.க ஸ்டாலின் தனது கருத்தை கூறியுள்ளார். அவர் பேசுகையில், “அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்ற அறிவிப்புகள் பட்ஜெட்டில் இல்லை

வேலை வாய்ப்பை மேம்படுத்துவதற்கான எந்த அறிவிப்பும் இல்லை. இது ஏமாற்றமாக இருக்கிறது. சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் கடன் இருக்கிறது. ஆனால், வருவாயை அதிகரிக்க எந்த அறிவிப்பும் இல்லை.

நிதி மேலாண்மை மோசமான தோல்வியை சந்திப்பதை பட்ஜெட் காட்டுகிறது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்காததே தேர்தல் நடக்காததற்கு காரணம்.

கோடநாடு கொள்ளை போன்று தமிழ்நாட்டை அடிப்பதற்கு பட்ஜெட் போடப்பட்டுள்ளது. நெல் கொள்முதல் விலையை அரசு உயர்த்தவில்லை.

ரபேல் விவகாரத்தில் பிரதமரே நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதற்கு பாதுகாப்புத்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளதை இந்து பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது. இது தொடர்பாக விசாரணை தேவை” என்று அவர் கூறினார்.

Also See...

First published: February 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...