ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

10 % இடஒதுக்கீடு விவகாரம் - நவ.12-ல் மு.க. ஸ்டாலினின்  தலைமையில் கூடுகிறது அனைத்து கட்சி கூட்டம்!

10 % இடஒதுக்கீடு விவகாரம் - நவ.12-ல் மு.க. ஸ்டாலினின்  தலைமையில் கூடுகிறது அனைத்து கட்சி கூட்டம்!

முதலமைச்சர் ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலின்

10 சதவிகித இடஒதுக்கீடு அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகளை வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்களுக்கும் கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினையடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.

    பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவிகிதம் இடஒதுக்கீடு அளிப்பதற்கான வழிவகை செய்யும் அரசியல் சட்டத் திருத்தம், கடந்த 2019 ஆம் ஆண்டு ஒன்றிய அரசால் நிறைவேற்றப்பட்டது.  இந்த இடஒதுக்கீட்டு சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர்களுக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்றம் நேற்று (7-ம் தேதி) அன்று தீர்ப்பு வழங்கியது.

    இந்த இடஒதுக்கீட்டு முறை சமூக நீதிக்கும், சமத்துவத்திற்கும் எதிராக அமைவதோடு, சமூக நீதிக் கொள்கைக்கும் மாறானது என்பதால், இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் விவாதித்து முடிவு எடுப்பதற்கு ஏதுவாக, வருகின்ற 12-ம் தேதி (சனிக்கிழமை) அன்று காலை 10-30 மணியளவில், தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் பத்தாவது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில், சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின்  தலைமையில் நடைபெறவுள்ளது.

    இதையும் படிங்க : இட ஒதுக்கீடுக்கு ஆபத்து...உடனே இதை செய்யுங்க ...“ - தமிழக அரசை அலெர்ட் செய்த அன்புமணி!

    இப்பொருள் குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகளை வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்களுக்கும் கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.  மேற்படி ஆலோசனைக் கூட்டத்தில் ஒவ்வொரு சட்டமன்றக் கட்சியின் சார்பாக இரண்டு பிரதிநிதிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    Published by:Lakshmanan G
    First published:

    Tags: All Party Meeting, CM MK Stalin