முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி .. வடசென்னையில் 10 கோடி மதிப்பில் குத்துச்சண்டை வளாகம் - பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி .. வடசென்னையில் 10 கோடி மதிப்பில் குத்துச்சண்டை வளாகம் - பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

TN Assembly : தமிழக சட்டப்பேரவையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுதுறை தொடர்பாக, விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டார். அப்போது, வடசென்னையில் குத்துச்சண்டை வளாகம் அமைக்கப்படும் என்றார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை தொடர்பாக, 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையில் அறிவிப்பை வெளியிட்டார்.

அதன் முக்கிய அம்சங்கள்:

ஒலிம்பிக் போன்ற பன்னாட்டு போட்டிகளில் பதக்கங்களை ஊக்குவிக்க 4 ஒலிம்பிக் அகாடமிக் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதிகளும் 3 கோடி ரூபாய் மதிப்பில் விளையாட்டு மைதானம் அமைக்கப்படும்.

வடசென்னையில் 10 கோடி மதிப்பில் குத்துச்சண்டை வளாகம் அமைக்கப்படும். அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு தனி மைதானம் அமைக்கப்படும்.

தமிழ்நாடு குழு போட்டிகளிலும், தனித்திறன் போட்டிகளிலும் தேசிய அளவில் முன்னிலையில் உள்ளது. ஊக்கத்தொகையை தொடர்ந்து வழங்கி வீரர்களை தமிழக அரசு ஊக்குவித்து வருகிறது.

சென்னைக்கு அருகில் மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி (Mega Sports City) அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

ஒலிம்பிக்கில் தங்கம் தேடுதல் என்ற திட்டம் 25 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது.

சென்னை ATP தொடர் மற்றும் பீச் வாலிபால் மீண்டும் நடத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

44 வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரம்மாண்டமாக நடத்த உள்ளது.

சிலம்பம் விளையாட்டை ஊக்கப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சர்வதேச அளவிலான போட்டிகளை நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் புதிய முதலீடுகளும் தொழில் வளர்ச்சியும் ஏற்படும்.

Must Read :  அரசு ஊழியர்கள் 2-வது திருமணம் செய்தால் நடவடிக்கை - தமிழக அரசு எச்சரிக்கை

தமிழக சுற்றுலாத்துறை வளர்ச்சி அடையும் வாய்ப்புகள் ஏற்படும். தமிழ்நாட்டின் இளைஞர் சக்தியை ஆக்கபூர்வமான வழியில் பயன்படுத்த அரசு முனைப்புடன் செயல்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.

First published:

Tags: MK Stalin, Sports, TN Assembly