• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் பெயர் மாற்றம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் பெயர் மாற்றம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

குடியிருப்புகளை மறுகட்டுமானம் செய்ய, சிதிலமடைந்த குடியிருப்புகளை இடிக்க தொழில்நுட்பக் குழு பரிந்துரைத்துள்ளது.

  • Share this:
    தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் பெயர் இனி, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரியம் என மாற்றப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டபேரவையில் அறிவித்தார். அப்போது பேசிய முதலமைச்சர், முதன் முதலாக குடிசை மாற்று திட்டத்தை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவாக்கினார் என்று கூறினார்.

    இந்நிலையில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரியத்தின் கொள்கை விளக்கக் குறிப்பில், சென்னை மற்றும் இதர நகரங்களில் 601 திட்டப்பகுதிகளில் 28,247 அடுக்குமாடி குடியிருப்புகளை இடிக்க தொழில்நுட்பகுழு பரிந்துரை செய்துள்ளது. தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தால் முன்னர் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் தட்பவெப்பநிலை பாதிப்புகள், தேய்மானம் காரணமாக வலுவிழுந்து சிதிலமடைந்துள்ளன.

    இந்தக் குடியிருப்புகளில் வாழும் குடும்பங்களின் உயிர்களுக்கும், உடைமைகளுக்கும் இது ஆபத்தினை ஏற்படுத்தும். இக்குடியிருப்புகளை மறுகட்டுமானம் செய்ய, தொழில்நுட்பக் குழு சிதிலமடைந்த குடியிருப்புகளை இடிக்க பரிந்துரைத்துள்ளது. புதிய குடியிருப்புகள் அதிக தரைப்பரப்பு குறியீட்டின் அடிப்படையில் புதுமையான வடிவங்களில் அதிக பொது வசதிகளுடனும் மற்றும் கூடுதல் தரைப்பரப்புடனும் மறுகட்டுமானம் செய்யப்படுகிறது.

    சிதிலமடைந்த அடுக்குமாடி குடியிருப்புகளை இடிக்க தொழில்நுட்பகுழு பரிந்துரை செய்துள்ளது. இதுவரை 2500 சிதிலமடைந்த குடியிருப்புகள் மறுகட்டுமானம் செய்யப்பட்டுள்ளன. 11,400 அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கான மறுகட்டுமானப் பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன.

    மறுகட்டுமானப் பணிகள் முடிவுற்றவுடன் பழைய குடியிருப்புகளில் முன்னர் வாழ்ந்த குடும்பங்களுக்கு புதிய குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்படும் கூடுதலாக கட்டப்பட்ட குடியிருப்புகள் இத்திட்டப்பகுதிகள் அல்லது அருகிய குடிசைப்பகுதிகளில் வாழும் குடும்பங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், தமிழ்நாட்டில் திருநெல்வேலி, மதுரை, தஞ்சை, சிவகங்கை, தேனி, தென்காசி, திண்டுக்கல், சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய 9 இடங்களில் மொத்தம் 950 கோடி திட்ட மதிப்பீட்டில், உட்கட்டமைப்பு வசதிகளுடன் சுமார் 6000 குடியிருப்புகள் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது. இந்தக் குடியிருப்புகளில் அந்தந்த மாவட்டங்களில் நீர்நிலைகளின் ஆக்கிரமிப்புகளில் வசித்து வரும் ஏழைக் குடும்பங்களை மறுகுடியமர்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

    Must Read : நாட்டின் அனைத்து கட்சிகளுக்கும் ஊக்கமளிக்கிறது - மு.க.ஸ்டாலினுக்கு பவன் கல்யாண் பாராட்டு!

    முதற்கட்டமாக திருநெல்வேலி சிவகங்கை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் மொத்தம் 489 கோடி திட்ட மதிப்பீட்டு 2,745 குடியிருப்புகளுக்கான முதற்கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: