Home /News /tamil-nadu /

நவம்பர் 1 உள்ளாட்சி தினமாக கொண்டாடப்படும் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

நவம்பர் 1 உள்ளாட்சி தினமாக கொண்டாடப்படும் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

TN Assembly : உள்ளாட்சியில் நல்லாட்சி என்ற இலக்கில் 60 ஊராட்சிகளில் 600 கிராம செயலகங்கள் கட்டப்படும் என தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் அறிவித்தார்.

    தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டுப் பேசினார். அவர் கூறுகையில், திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது என்றார்.

    110 விதியின் கீழ் முதலமைச்சர் வெயிட்ட அறிவிப்பின் முக்கிய அம்சங்கள்:

    தமிழகத்தில் ஆண்டுக்கு 4 முறை நடத்தப்படக்கூடிய கிராம சபை கூட்டம் இனி 6 முறை நடத்தப்படும். அதன்படி ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2, மார்ச் 22 நவம்பர் 1 என மேற்கொண்ட நாட்களில் நடத்தப்படும்.

    உள்ளாட்சிகள் தினமாக நவம்பர் 1ஆம் தேதி கொண்டாடப்படும். கிராங்களில் சிறப்பாக பணி செய்யக்கூடிய கிராம ஊராட்சி தலைவருக்கு உத்தமர் காந்தி விருது இந்த ஆண்டு முதல் வழங்கப்படும். கிராம ஊராட்சி மன்ற தலைவருக்கு புதிய வாகனம் வழங்கப்படும்.

    கிராம செயலகங்கள் அமைக்கப்படும். இந்த கிராமச் செயலகங்கள் ஊராட்சித் தலைவருக்கான அறை, அனைத்துத் துறை கூட்ட அரங்கம், கிராம நிர்வாக அலுவலருக்கான அறை, கிராம ஊராட்சி செயலருக்கான அறை, இணைய வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் கொண்டதாக இருக்கும்.

    Must Read : மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா.. சென்னை ஐஐடியில் 3 நாட்களில் 30 பேருக்கு பாசிட்டிவ்..

    இந்த புதிய முன்னெடுப்பின் முதற்கட்டமாக, இந்த ஆண்டு 600 புதிய கிராமச் செயலகக் கட்டடங்கள், ஒவ்வொன்றும் சுமார் 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
    Published by:Suresh V
    First published:

    Tags: MK Stalin, TN Assembly

    அடுத்த செய்தி