தமிழக சட்டப்பேரவையில் மக்கள் நலப்பணியாளர்கள் விவகாரம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்து பேசிய தமிழக முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின், கிராம பொது சொத்துக்களை பேணிக் காத்திடல், சிறுசேமிப்பு திட்டத்திற்கு உதவுதல் போன்ற கிராமப்புற பணிகளுக்காக 25,534 மக்கள் நலபணியாளர்கள் கலைஞர் ஆட்சியில் நியமனம் செய்யப்பட்டார்கள். 12.06.2006ல் கலைஞர் இந்தப் பணியிடங்களை மீண்டும் தோற்றுவித்து ஊராட்சிக்கு ஒருவர் என 12,618 பணியிடங்கள் உருவாக்கப்பட்டது.
ஆனால், அதிமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போது திமுக நியமித்த மக்கள் நலப் பணியாளர்களை பணி நீக்கம் செய்துள்ளது. தொடர்ந்து திமுக பதவியேற்ற நிலையில் மக்கள் நலப்பணியாளர்களுக்கு தொடர்ந்து பணி வழங்கியுள்ளது என்றும் மேலும், தற்போது மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குவது தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு உட்பட்டு ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள், மற்றும் சட்ட வல்லூனர்களுடன் கலந்து ஆலோசித்துள்ளனர் என்று தெரிவித்தார்.
அதிமுக ஆட்சியில் நீக்கப்பட்ட மக்கள் நலப்பணியாளர்கள், 12,524 பேருக்கு, மகாத்மா காந்தி வேலை உறுதி திட்ட ஒருங்கிணைப்பாளராக பணி வழங்க, முன்னுரிமை அளிக்க தமிழக அரசு தயாராக உள்ளது. இதற்கு மதிப்பூதியமாக 3000 இருந்து 5000 ஆக வழங்கப்படும் என்றார்.
மேலும், இவர்கள் கூடுதலாக கிராம ஊராட்சிகளில் பணிபுரிகிற பட்சத்தில் 2,500 ரூபாய் என மொத்தம் அவர்களுக்கு மதிப்பு அதிகமாக 7,500 ரூபாய் வழங்கப்படும்.
Must Read : முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறு பேச்சு.. நள்ளிரவில் பாஜக நிர்வாகி வீட்டில் குவிந்த போலீஸ்- குமரியில் பரபரப்பு
மறைந்த மக்கள் நல பணியாளர்களின் வாரிசுகள் விருப்பப்பட்டால் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்ட ஒருங்கிணைப்பாளராக பணி நியமனம் செய்வதற்கு முன்னுரிமை வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.