• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • MK Stalin Cabinet : மு.க.ஸ்டாலினைத் தொடர்ந்து தமிழக அமைச்சர்கள் பதவியேற்பு!

MK Stalin Cabinet : மு.க.ஸ்டாலினைத் தொடர்ந்து தமிழக அமைச்சர்கள் பதவியேற்பு!

மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழா

மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழா

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார், அவரைத் தொடர்ந்து மற்ற அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.

  • Share this:
    தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். அவருக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

    அதனைத் தொடர்ந்து பிற அமைச்சர்களும் பதவியேற்றனர். அதன்படி,

    துரைமுருகன் - நீர்வளத்துறை அமைச்சர்

    கே.என்.நேரு - நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்

    இ.பெரியசாமி - கூட்டுறவுத்துறை அமைச்சர்

    க. பொன்முடி - உயர்கல்வித்துறை அமைச்சர்

    எ.வ.வேலு - பொதுப்பணித்துறை அமைச்சர்

    எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் - வேளாண்மை துறை அமைச்சர்

    கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் - வருவாய்த்துறை அமைச்சர்



    தங்கம் தென்னரசு - தொழில்துறை அமைச்சர்

    எஸ். ரகுபதி - சட்டத்துறை அமைச்சர்

    முத்துச்சாமி - வீட்டுவசதி துறை அமைச்சர்

    பெரியகருப்பன் - ஊரகத்துறை அமைச்சர்

    தா.மோ. அன்பரசன் - ஊரகத்தொழில்துறை அமைச்சர்

    சாமிநாதன் - செய்தித்துறை அமைச்சர்



    கீதா ஜீவன் - சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர்

    அனிதா ராதாகிருஷ்ணன் - மீன்வளம் - கால்நடை துறை அமைச்சர்

    ராஜகண்ணப்பன் - போக்குவரத்து துறை அமைச்சர்

    ராமசந்திரன் - வனத்துறை அமைச்சர்

    சக்கரபாணி - உணவுத்துறை அமைச்சர்

    செந்தில்பாலாஜி - மின்சாரத்துறை அமைச்சர்

    ஆர்.காந்தி - கைத்தறி அமைச்சர்

    மா. சுப்பிரமணியன் - நல்வாழ்வுத்துறை அமைச்சர்

    மூர்த்தி - வணிகவரித்துறை அமைச்சர்



    சிவசங்கர் - பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்

    சேகர்பாபு - அறநிலையத்துறை அமைச்சர்

    பழனிவேல் தியாகராஜன் - நிதி அமைச்சர்

    சா.மு. நாசர் - பால்வளத்துறை

    செஞ்சி மஸ்தான் - சிறுபான்மைதுறை - வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர்

    அன்பில் மகேஸ் பொய்யாமொழி - பள்ளிக்கல்வி துறை

    மெய்யநாதன் - சுற்றுச்சூழல் துறை அமைச்சர்

    சி.வி.கணேசன் - தொழிலாளர்துறை அமைச்சர்

    மனோ தங்கராஜ் - தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்

    மதிவேந்தன் - சுற்றுலாத்துறை அமைச்சர்

    கயல்விழி - ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என அனைத்து அமைச்சர்களும் பதவியேற்றனர்.

    Must Read : MK Stalin swearing in ceremony Live Update: மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழா



    முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என்று கூறி மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஸ்டாலின் பதறியேற்றபோது அவரின் மனைவி துர்கா ஸ்டாலின் ஆனந்த கண்ணீர் மல்க அதனை கண்டு ரசித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: