லண்டன் சென்று விம்பிள்டன் டென்னிஸை ரசித்த ஸ்டாலின்

news18
Updated: July 12, 2018, 6:32 PM IST
லண்டன் சென்று விம்பிள்டன் டென்னிஸை ரசித்த ஸ்டாலின்
விம்பிள்டன் டென்னிஸ் மைதானத்தில் ஸ்டாலின்
news18
Updated: July 12, 2018, 6:32 PM IST
லண்டன் சென்றுள்ள திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அங்கு நடைபெற்று வரும் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை நேரில் கண்டு ரசித்தார். 

 

அவருடன், மனைவி துர்க்காவும் சென்றுள்ளார். டென்னிஸ் போட்டியை காண ஸ்டாலின் தனது மனைவியுடன் வந்து இருப்பதை அறிந்த இந்தியாவின் பழம்பெரும் டென்னிஸ் வீரரும், சென்னையை சேர்ந்தவருமான விஜய் அமிர்தராஜ் நேரில் சென்று அவர்களை வரவேற்று வணக்கம் தெரிவித்தார்.

அதன்பின்னர் டென்னிஸ் மைதானத்தை சுற்றிப் பார்த்த ஸ்டாலின் மற்றும் துர்க்கா ஸ்டாலின் அங்கிருந்த சாம்பியன் டென்னிஸ் வீரரான எப்.ஜே.பெர்ரி சிலையின் முன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.  அதன் பின்னர் தனது மனைவியுடன் சேர்ந்து ஸ்டாலின்  போட்டியை கண்டு ரசித்தார்.மேலும், டென்னிஸ் மைதானத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது சமூக வலைதளங்களில் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
First published: July 12, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...