தொழிலாளர் உரிமையைப் பறிக்கும் மத்திய அரசுக்கு தமிழக அரசு துணை போகிறது - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

தொழிலாளர் உரிமையைப் பறிக்கும் மத்திய அரசுக்கு தமிழக அரசு துணை போகிறது - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

மு.க. ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி

தொழிலாளர் உரிமையைப் பறிக்கும் மத்திய அரசுக்கு தமிழக அரசு துணை போகிறது என மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார்.

  • Share this:
நெய்வேலியில் நடைபெற்றுவரும் திமுக முப்பெரும் விழாவில் மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி சிலையை, மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். அதன் பிறகு பேசிய அவர், மத்திய மாநில அரசுகள் தொழிலாளர் விரோத அரசாக செயல்படுகின்றன. கொரோனா பேரிடரில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் தொழிலாளர்கள். தொழிலாளர் உரிமையைப் பறிக்கும் திட்டங்களை மத்திய அரசு கொண்டுவருகிறது. தமிழக அரசு அதற்குத் துணை போகிறது. மத்திய அரசு பொருளாதாரம் மீட்க வெளியிட்ட திட்டங்கள் திட்டங்களாகவே உள்ளன; செயல்படுத்தவில்லை என்றார். முதலமைச்சருக்கு தொழிலாளர்களையும் விவசாயிகளையும் பிடிக்காது; ஆனால் நானும் ஒரு விவசாயி என்று அவர் கூறிக் கொள்வார் என மு.க.ஸ்டாலின் சாடினார்.

நீட் தேர்வினால் ஏராளமான மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆனால், என்னைப் பொருத்தமட்டில் மத்திய, மாநில அரசுகள் செய்த கொலை என்று குற்றம்சாட்டினார். மேலும், சட்டமன்றத்தில் நீட் தேர்வு குறித்து திமுக பேசியதை வெளியிடாமல் முதல்வர் பேசியதை மட்டுமே வெளியிட்டுள்ளனர் என்று தெரிவித்த அவர், 2016ம் ஆண்டு நீட் தேர்வைக் கொண்டுவந்தது பாஜக, அதற்கு ஆதரவாக இருந்தது அதிமுக. அப்போது திமுகவும், காங்கிரஸ் கட்சியும் ஆட்சியில் இல்லை என்றும் இந்த வரலாறு தெரியாமல் முதலமைச்சர் பொய் பேசுகிறார், உளறுகிறார் என்றார்.

Also read: சசிகலா வந்தாலும் அது எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது - அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று 7 மாநில முதலமைச்சர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்கள் என்று சுட்டிக்காட்டிய மு.க.ஸ்டாலின், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுக்குழுவில் பேசப்பட்டது. தேர்தல் அறிக்கையிலும் கூறினார்கள். சட்டமன்றத்திலும் தீர்மானம் போடப்பட்டது. ஆனால் அதை நிறைவேற்றமால் இருக்கிறார்கள் என குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், கோழைத்தனத்தை மறைக்க திமுகவை குறை சொல்கிறார்கள். முதல்வர் அடிக்கும் கொள்ளையை மத்திய அரசு கண்டுக்கொள்ளாமல் இருக்க அதிமுக நீட் தேர்வுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது. மேலும், முதல்வரின் ஆட்டம் 6 மாதம் மட்டுமே என்ற அவர், தொடர்ந்து கருணாநிதி வழி, அண்ணா வழி நின்று பயணத்தைத் தொடர்வோம், வெற்றி நமதே’ என்று தெரிவித்தார்.
Published by:Rizwan
First published: