‘தமிழக அரசு சோற்றுக்கு கையேந்தும் நிலைக்கு ஆளாக்கியுள்ளது’ - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

‘தமிழக அரசு சோற்றுக்கு கையேந்தும் நிலைக்கு ஆளாக்கியுள்ளது’ - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

திமுக தலைவர் ஸ்டாலின்

தமிழக அரசு முறையாக நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைக்காததால் சுமார் 50 ,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணானதாக மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

 • Share this:
  சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மாவட்ட வாரியாக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக உரையாற்றி வருகிறார். அதன் ஒரு பகுதியாக நாகை மற்றும் திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள் மத்தியில் ஸ்டாலின் பேசினார்.

  அப்போது திமுக ஆட்சியில் நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களுக்கு செய்த நலத்திட்டங்களை பட்டியலிட்டார். தொடர்ந்து பேசிய அவர் தமிழக அரசு சோற்றுக்காக மக்களை கையேந்தும் நிலைக்கு ஆளாகியுள்ளதாக குற்றம்சாட்டினார்.

  கொரோனா காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு வழங்கிய 5 லட்சம் மெட்ரிக் டன் அரிசியை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கள்ளச்சந்தையில் விற்றுவிட்டதாக கடுமையாக சாடினார்.
  Published by:Sankaravadivoo G
  First published: