ஜனவரி 3ம் தேதி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்து புதிய கட்சி துவங்குவது குறித்து முடிவெடுக்கவுள்ளதாக மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
சென்னை கோபாலபுரத்தில் தன்னுடைய தாயார் தயாளு அம்மாவின் உடல்நலம் குறித்து மு.க.அழகிரியும் அவருடைய மனைவி காந்தி அழகிரியும் நேரில் சந்தித்து விசாரித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுகவுடன் சேர்ந்து தேர்தல் பணி செய்ய வாய்ப்பில்லை என்றும் வரும் 3 ஆம் தேதி மதுரையில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்திய பின் ஆதரவாளர்கள் ஆலோசனைப்படி செயல்படுவோம் என்றும் தெரிவித்தார்.
மேலும், தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும் என்று தெரிவித்த அழகிரி, ஓட்டு போடுவது பங்களிப்புதான் என்றும் ஆதரவாளர்கள் விரும்பினால் கட்சி ஆரம்பிப்பேன் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து ரஜினியை நேரில் சந்திக்க வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த அழகிரி, ரஜினி சென்னையில் இல்லை என்றும், அவர் சென்னை வந்தால் சந்திப்பேன் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் கூட்டணி தொடர்பாக முடிவு எடுக்க ஒரு மாதம் கூட ஆகலாம் என நியூஸ் 18 தென் மண்டல நிர்வாக ஆசிரியர் விவேக் நாராயணிடம் மு.க.அழகிரி கூறியுள்ளார்.