ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

“நானும் கருணாநிதியின் பிள்ளை தான்“ - அழகிரி பேச்சு

“நானும் கருணாநிதியின் பிள்ளை தான்“ - அழகிரி பேச்சு

அழகிரி

அழகிரி

கருணாநிதி மறைவிற்கு பின் முற்றிலுமாக தனது பிறந்த நாளன்று ஆதரவாளர்கள் யாரும் தன்னை வந்து சந்திக்க வேண்டாமென்று கேட்டு கொண்டார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

நானும் கருணாநிதியின் பிள்ளை என்பதை நினைவு வைத்து கொள்ளுங்கள் என்று திருமண விழாவில் அழகிரி பேசி உள்ளார்.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி தனது 70வது பிறந்த நாளை இன்று கொண்டாடினார். மு.க.அழகிரியின் பிறந்த நாளின் போது மதுரை முழுவதும் போஸ்டர், பேனர் என அவரது ஆதரவாளர்கள் பிறந்தநாளை ஆரவரமாக கொண்டாடுவார்கள். ஆனால் திமுகவில் இருந்து அழகிரி நீக்கப்பட்ட பின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்த்து வந்தார்.

கருணாநிதி மறைவிற்கு பின் முற்றிலுமாக தனது பிறந்த நாளன்று ஆதரவாளர்கள் யாரும் தன்னை வந்து சந்திக்க வேண்டாமென்று கேட்டு கொண்டார். அதேப் போன்று இந்த வருடமும் அழகிரி ஆதரவாளர்கள் யாரையும் சந்திக்கவில்லை. எந்தவிதமான பிறந்த நாள் கொண்டாட்டாத்திலும் அவர் பங்கேற்வில்லை.

வழக்கறிஞர் மோகன் இல்லத் திருமண விழாவில் மட்டும் இன்று அவர் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அழகிரி, “நன்றி மறந்து நடந்து கொள்வது எளிதாகி விட்டது. அதிமுகவை சேர்ந்த எம்.எல்.ஏ, எம்.பிக்கள் கூட என்னை பார்த்தால் வணக்கம் சொல்லி பேசுகிறார்கள்.

ஆனால் திமுக-வை சேர்ந்தவர்கள் என்னை பார்த்தாலே பயந்து பேசுவதை தவிர்த்து வருகின்றனர். இந்த நிலைமையெல்லாம் எப்போது மாறும் என்று தெரியவில்லை. என்னைப் பற்றி எல்லோருக்கும் நன்கு தெரியும். மற்றவர்கள் மட்டும்தான் கலைஞரின் பிள்ளை அல்ல. நானும் கலைஞரின் பிள்ளைதான். அதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்" என்றார்.

First published:

Tags: DMK, MK Azhagiri