முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அமைச்சர் செல்லூர் ராஜூ இல்லத்தில் மு.க.அழகிரி

அமைச்சர் செல்லூர் ராஜூ இல்லத்தில் மு.க.அழகிரி

அழகிரி - செல்லூர் ராஜு

அழகிரி - செல்லூர் ராஜு

  • Last Updated :

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, அமைச்சர் செல்லூர் ராஜூவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு பிறகு, திமுக-வில் தன்னை இணைத்துக் கொள்ளுமாறு வலியுறுத்தி வரும் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, கடந்த வாரம் சென்னை மெரீனாவில் தனது ஆதரவாளர்களை திரட்டி அமைதி பேரணி நடத்தினார். அப்போது அந்த பேரணியில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என அழகிரி கூறியிருந்தார்.

செல்லூர் ராஜு இல்லத்தில் முக அழகிரி

இந்நிலையில், மதுரையில் உள்ள அமைச்சர் செல்லூர் ராஜூவின் இல்லத்திற்கு மு.க.அழகிரி சென்றார். அங்கு செல்லூர் ராஜூவின் தாயார் ஒச்சம்மாளின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அழகிரி, சில நிமிடங்கள் அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் பேசினார். அப்போது, அண்மையில் உயிரிழந்த தன் தாயாரின் நினைவுகளை அழகிரியுடன் செல்லூர் ராஜூ பகிர்ந்து கொண்டார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, செல்லூர் ராஜூ-வின் தாயார் அண்மையில் உயிரிழந்த நிலையில், துக்கம் விசாரிக்க வந்ததாக கூறினார்.

First published:

Tags: Azhagiri meets Minister Sellur Raju, Madurai, MK Alagiri, MK Azhagiri, Sellur Raju