காணாமல் போனது எங்கள் கல்லூரி நாட்கள்.. ஃபேரவல் பார்ட்டி கூட ஆன் லைனில்தான் - வேதனையில் 2k KIDS

கல்லூரி பருவம்

கல்லூரி பருவம் ஒரு கலர்புல் பருவம் அது தற்போது கிடைக்கவில்லை என்பது ஏமாற்றமாக இருப்பதாகவும், தனிமையை அனுபவிப்பதாகவும் வேதனையில் தெரிவிக்கின்றனர் 2k KIDS.

 • Share this:
  கனவுகளோடு கல்லூரிக்கு அடி எடுத்து வைக்க நினைத்து கனவுகள் அனைத்தும் காற்றில் கரைவது போல் இந்த லாக்டவுனில் கரைந்ததாக வேதனையில் உள்ளனர் 2k KIDS.இந்த கொரோனா ஊரடங்கில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்கள் வகுப்புகளை முழுவதும் ஆன்லைனில் மட்டுமே செலவழித்தனர்.

  இதனால் பள்ளி முடிந்து கல்லூரி சென்ற மாணவர்கள் தங்கள் கல்லூரி காலத்தை ஆன்லைன் கிளாஸ் வாயிலாகவே கற்கும் வாய்ப்பு கிட்டியது. நண்பர்கள் ஒருவரை ஒருவர் நேரில் பார்த்துக் கொள்ளுதல், ஊர் சுற்றுதல் என்பது ஊரடங்கால் முடியாமல் போனது.

  தங்களின் கல்லூரி வாழ்க்கையை இழந்து போனதாக வேதனையில் இருக்கும் 2k KIDS இது குறித்து தெரிவிக்கையில், எங்களோட கல்லூரி வாழ்க்கைய நாங்க அநியாயத்துக்கு மிஸ் பன்றோம். காலேஜில் நண்பர்களோடு சேர்ந்து கேன்டீன்செல்வது, பெண்களை பார்ப்பது , அவர்களுடன் பேசுவது , அரட்டை அடிப்பது, என சிறு சிறு விஷயங்கள் கூட மிஸ் பன்றோம் என தெரிவிக்கின்றனர் 2k KIDS.

  வீட்டில் தனிமையாக உட்கார்ந்து இருப்பது போல் இருப்பதாக தெரிவிக்கின்றனர். அழகான கல்லூரி நாட்களை இழந்து விட்டோம் என தெரிவிக்கும் 2k KIDS ஃபேரவல் பார்ட்டி கூட ஆன் லைனில்தான் நடக்கின்றது. நண்பர்களுடன் டூர் செல்வது எதுவும் இல்லை என தெரிவிக்கின்றனர்.

  கல்லூரி ஜாலியாக இருப்பதாகவும், அங்கு சென்றால் மட்டுமே உணர்வு ரீதியான நட்புகளும், வீட்டை தாண்டி வெளியில் கற்றுக்கொள்ளும் வாய்ப்பும் பெருகி வருவதாக தெரிவிக்கின்றனர். கல்லூரி பருவம் ஒரு கலர்புல் பருவம் அது தற்போது கிடைக்கவில்லை என்பது ஏமாற்றமாக இருப்பதாகவும், தனிமையை அனுபவிப்பதாகவும் வேதனையுறுகின்றனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Sankaravadivoo G
  First published: