திருவள்ளூரில் காணாமல் போன 10ம் வகுப்பு மாணவி எலும்புக் கூடாக கண்டெடுப்பு

திருவள்ளூர் கீச்சளம் கிராமத்தில் உள்ள தனியார் கரும்பு தோட்டத்தில், மாணவி சரிதா அணிந்திருந்த பள்ளி சீருடை, காலணி உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டன.

Web Desk | news18
Updated: February 11, 2019, 3:05 PM IST
திருவள்ளூரில் காணாமல் போன 10ம் வகுப்பு மாணவி எலும்புக் கூடாக கண்டெடுப்பு
கோப்புப் படம்
Web Desk | news18
Updated: February 11, 2019, 3:05 PM IST
திருவள்ளூரில் காணாமல்போன பள்ளி மாணவி  5 மாதங்களுக்கு பின்னர் எலும்புக் கூடாக மீட்கப்பட்டுள்ளார். அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கியுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் புது வெங்கடாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியின் மகள் சரிதா, பத்தாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த செப்டம்பர் மாதம் 7-ம் தேதி பள்ளிக்கு செல்வதாக சென்ற மாணவி சரிதா, அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து சரிதாவின் தந்தை காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இந்நிலையில், கீச்சளம் கிராமத்தில் உள்ள தனியார் கரும்பு தோட்டத்தில், பள்ளி சீருடையில் எலும்புக் கூடுகள் சிதறிக் கிடப்பதை கண்ட விவசாயி சுரேஷ் என்பவர், போலீசாருக்கு தகவல் அளித்தார்.சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொன்னி, விசாரணை மேற்கொண்டார். அப்போது காணாமல்போன மாணவி சரிதா அணிந்திருந்த பள்ளி சீருடை, அவரது காலணி உள்ளிட்டவை அருகில் கிடந்ததை வைத்து மாணவி சரிதாவின் எலும்புக் கூடுகள் என போலீசார் முடிவு செய்தனர்.

மேலும் அதனை உறுதிப்படுத்த மண்டை ஓடு, எலும்புக் கூடுகளை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். மாணவி சரிதா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also see... சிலம்பம் கற்பதை கேலி செய்ததால் மனமுடைந்த மாணவி 
First published: February 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...