கோலாகலமாக நடைபெற்ற மிஸ் கூவாகம் அழகிப் போட்டி! இந்தாண்டு அழகி யார் தெரியுமா?

கூத்தாண்டவர் கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான தாலி கட்டும் நிகழ்ச்சி இன்று இரவும், அரவான் களப்பலியும், தேரோட்டமும் நாளையும் நடைபெற உள்ளன.

Web Desk | news18
Updated: April 16, 2019, 2:35 PM IST
கோலாகலமாக நடைபெற்ற மிஸ் கூவாகம் அழகிப் போட்டி! இந்தாண்டு அழகி யார் தெரியுமா?
திருநங்கைகளுக்கான அழகி போட்டி
Web Desk | news18
Updated: April 16, 2019, 2:35 PM IST
2019-ம் ஆண்டுக்கான திருநங்கைகளுக்கான அழகி போட்டி விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கிராமத்தில் விழுப்புரம் நகராட்சி பள்ளியில் நேற்று நடைபெற்றது

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கிராமத்தில் அமைந்துள்ளது கூத்தாண்டவர் கோவில். திருநங்கைகளின் குலதெய்வமாக கருதப்படும் இந்த கோவிலில் பிரசித்திப் பெற்ற சித்திரை திருவிழா கடந்த 2ம் தேதி தொடங்கியது.

இதில் பங்கேற்பதற்காக தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான திருநங்கைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், திருவிழாவிற்காக கூடியுள்ள திருநங்கைகளை உற்சாகப்படுத்தும் விதமாக தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு எயிட்ஸ் கட்டுப்பாடு சங்கம் ஒவ்வொரு ஆண்டும் நடனப் போட்டிகளும், மிஸ் கூவாகம் அழகி போட்டியும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்தாண்டுக்கான அழகி போட்டி விழுப்புரம் நகராட்சி பள்ளியில் நேற்று நடைபெற்றது. முதலில் நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் மக்கள் இசை பாடகர்கள் செந்தில், ராஜலட்சுமியின் நிகழ்ச்சியும், திருநங்கைகளின் நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது.

பின்னர் நடைபெற்ற அழகிப் போட்டியில் பங்கேற்ற திருநங்கைகள் இசைக்கு ஏற்றப்படி ஒய்யாரமாக நடந்து வந்து பார்வையாளர்களை கவர்ந்தனர்.

தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்ற இந்த போட்டியில், இந்தாண்டிற்கான மிஸ் கூவாகமாக தருமபுரியைச் சேர்ந்த நபீசாவும், இரண்டாவதாக கோவையைச் சேர்ந்த திருநங்கை மடோனாவும், மூன்றாவதாக பவானியைச் சேர்ந்த ருத்ரா என்ற திருநங்கையும் தேர்வு செய்யப்பட்டனர்.

கூத்தாண்டவர் கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான தாலி கட்டும் நிகழ்ச்சி இன்று இரவும், அரவான் களப்பலியும், தேரோட்டமும் நாளையும் நடைபெற உள்ளன.

Also Watch: பொன். ராதாகிருஷ்ணன் கூறும் பிச்சைக்காரன் கதைய கேளுங்க!


சினிமா செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  பொழுதுபோக்கு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...