ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

'மக்களின் மனம் வென்ற மாமன்னர்'.. உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பிறந்தநாள் வாழ்த்து

'மக்களின் மனம் வென்ற மாமன்னர்'.. உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பிறந்தநாள் வாழ்த்து

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

Udhayanidhi stalin | திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதிஸ்டாலின் இன்று தனது 46 வயதில் அடியெடுத்து வைக்கிறார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவான உதயநிதி ஸ்டாலினுக்கு தனது டிவிட்டர் பக்கத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளரும்  சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

இதனையொட்டி ஏராளமானோர் அதிகாலை முதலே அவருக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். அந்த வகையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அவரது ட்விட்டர் பக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அதில், நின்ற சொல்லர், நீடு தோன்று இனியர், மக்களின் மனம் வென்ற மாமன்னர், இளைய சமுதாயத்தின் எழுச்சி நாயகர், திருமிகு உதயநிதி ஸ்டாலினுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

இதே போன்று நடிகர் கமல்ஹாசனும் அவரது ட்விட்டர் பக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அதில், சேப்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும்,நிறுவனத்தின் தலைவரும், எங்கள் ராஜ் கமல் நிறுவனத்தின் முயற்சிகளில் பங்கெடுத்துக் கொள்பவரும், என் அன்புத் தம்பியுமான உதயநிதி ஸ்டாலினுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

First published:

Tags: DMK, Kamalhaasan, Senthil Balaji, Udhayanidhi Stalin, Udhayanithi Satlin