ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தீபாவளி டாஸ்மாக் வசூல் நிலவரம்: ட்விட்டரில் சண்டை செய்யும் அமைச்சர் செந்தில் பாலாஜி, அண்ணாமலை!

தீபாவளி டாஸ்மாக் வசூல் நிலவரம்: ட்விட்டரில் சண்டை செய்யும் அமைச்சர் செந்தில் பாலாஜி, அண்ணாமலை!

மாதிரி படம்

மாதிரி படம்

தீபாவளி பண்டிகைக்கு டாஸ்மாக் வசூல் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அண்ணாமலை இடையே ட்விட்டரில் மோதல் ஏற்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தீபாவளி பண்டிகைக்கு டாஸ்மாக் வசூல் குறித்து செய்தி வெளியிட்ட செய்தி நிறுவனம் மற்றும் செய்தியாளர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ள நிலையில், அவரை விமர்சித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் பதிவிட்டுள்ளதால் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அண்ணாமலை இடையே ட்விட்டரில் மோதல் ஏற்பட்டுள்ளது.

  பண்டிகையை ஒட்டி தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களில் டாஸ்மாக் கடைகளில் 720 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றதாக தகவல் வெளியான நிலையில் அதற்கு அமைச்சர் செந்தில்பாலாஜி மறுப்பு தெரிவித்துள்ளார்.

  தீபாவளி பண்டியையொட்டி தமிழ் நாட்டில் கடந்த மூன்று நாட்களில் 708 கோடி ருபாய்க்கு மது விற்பனை நடைபெற்றதாக தகவல் வெளியானது. அதன்படி, அக்டோபர் 22ம் தேதி 205 கோடி ரூபாய்க்கும், 23ம் தேதி 258 கோடி ரூபாய்க்கும், தீபாவளி தினமாக நேற்று ரூ.244 கோடி ரூபாய்க்கும் மது விற்பனை நடைபெற்றதாக தகவல் பரவியது.

  இதையும் படிங்க: வாட்ஸ் ஆப் முடக்கத்தால் உலகம் முழுவதும் எத்தனை கோடி பேர் பாதிக்கப்பட்டனர் தெரியுமா?

  இது தொடர்பாக பல்வேறு ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இதனை மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் , தீபாவளிக்கு முன்பாக டாஸ்மாக் இலக்கு என எதையும் நிர்ணயிக்கவில்லை என்றும் தீபாவளிக்கு பிந்தைய மதுபான விற்பனை குறித்த விவரங்கள் டாஸ்மாக் நிர்வாகத்திற்கே வந்து சேரவில்ல என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தவறான தகவல் வெளியிட்டுள்ள செய்தி நிறுவனம் மற்றும் செய்தியாளர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி ட்விட்டரில் பதிலளித்தார்.

  அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்விட்டர் பதிவுக்கு பதிலளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கோவையில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலை பற்றி பேச நேரமில்லாத சாராய அமைச்சர், டாஸ்மாக் மூலம் வந்த வருமானத்தை சுட்டிக்காட்டிய பத்திரிகையாளர் மீது நடவடிக்கை எடுப்பாராம் என பதிவிட்டு இருந்தார்.

  இந்த ட்விட்டர் பதிவுக்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மதக் கலவரங்களை ஏற்படுத்திவிட முடியாதா, அதனால் மக்கள் அடித்துக் கொள்ளமாட்டார்களா, அதன் மூலம் தமக்கு அரசியல் ஆதாயம் கிடைத்துவிடாதா என மூன்று பதிவுகளை பதிவிட்டுள்ளார்.இப்படி அமைச்சர் செந்தில் பாலாஜியும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் மாறி மாறி ட்விட்டரில் மோதிக்கொண்டு வார்த்தை போரை நடத்தி வருகின்றனர்.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Annamalai, Senthil Balaji, Tasmac, Twitter