Home /News /tamil-nadu /

இளையராஜா குறித்த சர்ச்சை பேச்சு: ஈ.வி.கே.எஸ், கி.வீரமணி மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க நோட்டீஸ்

இளையராஜா குறித்த சர்ச்சை பேச்சு: ஈ.வி.கே.எஸ், கி.வீரமணி மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க நோட்டீஸ்

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

Ilaiyaraja Row: இளையராஜா குறித்த சர்ச்சை பேச்சு தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் சென்னை மாநகர காவல்துறை ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

மேலும் படிக்கவும் ...
  • News18
  • Last Updated :
இளையராஜா குறித்த சர்ச்சை பேச்சு தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் சென்னை மாநகர காவல்துறை ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

இசைஞானி இளையராஜா ஒரு ஆங்கில புத்தகத்துக்கு எழுதிய முன்னுரையில், பிரதமர் நரேந்திர மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு எழுதியுள்ளார். இதற்கு தமிழகத்தைச் சோ்ந்த பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.

இளையராஜா தனது கருத்தை திரும்பப் பெற வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர். ஆனால் இளையராஜா, தனது கருத்தை திரும்பப் பெற மறுத்துவிட்டார். இந்த விவகாரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவர் ஜே பி நட்டா, இளையராஜாவுக்கு எதிரான ஆட்சேபிக்கத்தக்க கருத்து கூறியவர்களை கடிந்து தனது கண்டனத்தை வெளியிட்டார்.

இந்த நிலையில், அண்மையில் ஈரோட்டில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்ற விழாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், "அம்பேத்கர் போன்றவர்களுடன் மோடியை ஒப்பிடுவது என்ன நியாயம்? ஓர் அரசிடம் உதவி பெற்று படித்த அம்பேத்கர், அப்படியே மேல்நோக்கிப் போயிருக்கலாம்.

ஆனால் வெளிநாடுகளில் சென்று படித்துவிட்டு, இழிநிலையில் இருக்கின்ற தாழ்த்தப்பட்ட மக்களுக்காக உழைக்கவேண்டும் என்று கடைசி வரை உழைத்தவர், இந்த நாட்டிற்கு அரசியலமைப்பு வகுத்துக் கொடுத்தவர் அவர். இந்த நாட்டில் உள்ள தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக உழைத்தவர்களை நீங்கள் அசிங்கம் செய்யவேண்டும் என்று நினைத்தால், அதில் என்ன நியாயம் இருக்கிறது? இளையராஜாவிற்கு ஒருமுறை அடிபட்டால் போதாது என்று நினைக்கின்றேன்.

பெரியார் திரைப்படத்திற்கு இசையமைக்க மாட்டேன் என்று சொன்னவர்தான் இந்த இளையராஜா. தபேலா எடுத்து அடிப்பவன் எல்லாம் இசைஞானி ஆகிவிட முடியாது. அவர் மனதிற்குள் சங்கராச்சாரியார் என்ற நினைப்பா?" என இளையராஜா குறித்து கூறிய கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இளங்கோவனின் பேச்சுக்கு தலித் இயக்கத்தினா் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக, சென்னையைச் சோ்ந்த புரட்சித் தமிழகம் நிறுவனா் தலைவா் ஏா்போா்ட் த.மூா்த்தி, தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையத்தில் புகாா் அளித்தாா். அந்தப் புகாா் குறித்து விசாரணையை  தொடங்கியுள்ள தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையம், சென்னை காவல்துறை ஆணையா் மற்றும் சென்னை மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Also read... பப்ஜி மதன் தாக்கல் செய்த ஜாமீன் மனு.. ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவு

அதில், ஏர்போர்ட் மூர்த்தி வழங்கியுள்ள புகார் தொடர்பாக விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாகவும், இந்த உத்தரவு கடிதம் கிடைக்கப்பெற்ற 15 நாட்களுக்குள் இந்த வழக்கு தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நேரிலோ அல்லது அஞ்சல் வாயிலாகவோ அறிக்கை அளிக்க வேண்டும் கூறப்பட்டுள்ளது.

 
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: EVKS Elangovan, Ilayaraja, K.Veeramani

அடுத்த செய்தி