கூட்டணி வேறு... கட்சி வேறு... சிறுபான்மையினருக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி

கூட்டணி வேறு... கட்சி வேறு... சிறுபான்மையினருக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி

எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் சிறுபான்மையினரின் நலனுக்காக தொடர்ந்து அதிமுக பாடுபடும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்தார்.

  • Share this:
ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் பழனிசாமி, பார்த்திபனூரில் கால்நடை பராமரிப்போர் மற்றும் பரமக்குடியில் நெசவாளர்களை சந்தித்தார். அத்துடன், சவுராஸ்டிரா மக்கள், வர்த்தக சங்கத்தினர், வணிகர்கள், சமுதாய தலைவர்களுடன் மற்றும் முக்கிய பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். இதை தொடர்ந்து, தொடர்ந்து பரமக்குடி பேருந்து நிலையம் பகுதியில் திறந்த வெளியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ராமநாதபுரம் மாவட்டத்தில் 39 இடங்களில் அம்மா மினி கிளினிக் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதையடுத்து, வாணியில் உள்ள மண்படத்தில் நடைபெற்ற அதிமுக தகவல் தொழில்பிரிவு மற்றும் இளைஞர், இளம்பெண் பாசறை நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளதை சிலர் தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதாக கூறினார். ஆனால், கட்சியின் கொள்கை வேறு, கூட்டணி வேறு என்று குறிப்பிட்டார். மேலும், தமிழகத்தில் சிறுபான்மையினருக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது என்று உத்தரவாதம் அளிப்பதாகவும் தெரிவித்தார்.

முன்னதாக, ராமநாதபுரத்தில் இஸ்லாமிய சமுதாய தலைவர்களுடன் முதலமைச்சர் கலந்துரையாட ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், அந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் பங்கேற்பதில் தாமதமானது. இதனால், பொறுமை இழந்த இஸ்லாமிய தலைவர்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர்களுடன் சமாதான பேச்சு நடத்தியதால் அமைதியாகினர்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: