Home /News /tamil-nadu /

சண்டைச் சேவல் திருட்டு: சொந்த அண்ணனை கத்தியால் குத்திக்கொன்ற தம்பி.. நடந்தது என்ன?

சண்டைச் சேவல் திருட்டு: சொந்த அண்ணனை கத்தியால் குத்திக்கொன்ற தம்பி.. நடந்தது என்ன?

கொல்லப்பட்ட முனியாண்டி

கொல்லப்பட்ட முனியாண்டி

முனியாண்டியின் சகோதரரைப் பிடித்து சிறார் கூர் நோக்ககத்திற்கு அனுப்பி வைத்தனர். சண்டைச் சேவலுக்காக சொந்த அண்ணனையே தம்பி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    திண்டுக்கல் அருகே சண்டைச் சேவல் திருடியதற்காக அண்ணனை தம்பியே குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடிக்கடி சின்ன சின்ன விஷயங்களுக்கு சண்டையிட்டுக் கொண்ட இந்த சகோதரர்களில் ஒருவர், சண்டைச் சேவலால் உயிரை இழந்துள்ளார். இன்னொருவர் கொலைக் குற்றவாளி ஆகியுள்ளார். சேவல் திருட்டு ஒன்று கொலைக்கு காரணமாகியுள்ளது.

    திண்டுக்கல் மாவட்டம், அம்பாத்துரையை அடுத்துள்ள வீ.கல்லுப்பட்டியைச் சேர்ந்தவர்கள் 28 வயது முனியாண்டி மற்றும் அவரது 17 வயது தம்பி. இருவரும் கூலி வேலைக்கு சென்று வந்தனர். சிறு சிறு விஷயங்களுக்கு அடிக்கடி சண்டையிட்டுக் கொள்பவர்கள் எனக் கூறப்படுகிறது.

    முனியாண்டியின் தம்பி, வீட்டில் சண்டைச் சேவல் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். செவ்வாய்க்கிழமை அன்று அந்த சேவலைக் காணவில்லை. இதுதொடர்பாக விசாரித்த பொழுது அண்ணன் முனியாண்டி தான் சேவலைத் திருடி மறைத்து வைத்துள்ளார் என்பது தம்பிக்குத் தெரியவந்துள்ளது. அண்ணனிடம் சேவல் குறித்து கேட்டபோது இருவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரத்தில் தம்பி தனது கத்தியால் அண்ணன் முனியாண்டியின் வயிற்றில் சரமாரியாகக் குத்தியுள்ளார்.



    இதில் குடல் சரிந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார் முனியாண்டி; அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் முனியாண்டி உயிரிழந்தார்

    இதுதொடர்பாக அம்பாத்துரை போலீசார் வழக்குப் பதிவு செய்து முனியாண்டியின் சகோதரரைப் பிடித்து சிறார் கூர் நோக்ககத்திற்கு அனுப்பி வைத்தனர். சண்டைச் சேவலுக்காக சொந்த அண்ணனையே தம்பி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
    Published by:Gunavathy
    First published:

    Tags: Crime | குற்றச் செய்திகள், Dindugal, Murder

    அடுத்த செய்தி