Home /News /tamil-nadu /

மதுபோதையில் தகராறு.. 18 வயது அண்ணண் தலையில் அம்மிக்கல்லைப் போட்டு துடிதுடிக்க கொன்ற மைனர் தம்பி

மதுபோதையில் தகராறு.. 18 வயது அண்ணண் தலையில் அம்மிக்கல்லைப் போட்டு துடிதுடிக்க கொன்ற மைனர் தம்பி

ஆட்டிப்பட்டி காவல் நிலையம்

ஆட்டிப்பட்டி காவல் நிலையம்

Theni : ஆண்டிபட்டி அருகே நள்ளிரவில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த அண்ணனை, மைனர் தம்பி கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் மது போதையில் சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், 18 வயதுடைய அண்ணன் தலையில் அம்மிக்கல்லை போட்டு துடிக்கத் துடிக்க கொலை செய்த மைனர் தம்பியை கைது செய்து, காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆண்டிபட்டி அருகே உள்ள சக்கம்பட்டி சீத்தாராம்தாஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மனைவி இறந்து விட்ட நிலையில் வெளியூரில் வேலை செய்து வருகிறார். ஆண் பிள்ளைகள் இருவர் வசந்தகுமார் (18) மற்றும்  16 வயது சிறுவன், ஆண்டிபட்டியில் அவர்களுடைய பாட்டி பழனியம்மாளுடன் வசித்து வந்தனர்.

    அண்ணன் வசந்த குமார் பால் கறக்கும் வேலை செய்து வந்தார். தம்பி கிடைக்கும் சிறு வேலைகளை செய்து வருகிறார். இவர்கள் இருவரும் மது மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையானதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், நேற்று அண்ணன் வசந்தக்குமார் அவரது பாட்டியிடம் மது அருந்துவதற்கு பணம் கேட்டதாக தெரிகிறது. அப்போது அண்ணன்-தம்பிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஆத்திரமடைந்த 16 வயது மைனர் தம்பி, நள்ளிரவில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த அண்ணன் வசந்தகுமார் தலையில் அம்மி கல்லை தூக்கிப் போட்டுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மேலும், அரிவாள்மனையால் அண்ணனின் கால் மற்றும் கைகளில் அறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த வசந்தகுமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இந்த கொடூர கொலை சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் ஆண்டிபட்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த வசந்தகுமாரின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்த 16 வயதுடைய சிறுவனை  கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Must Read : பேரறிவாளன் விடுதலையால் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் விரிசலா? - திருநாவுக்கரசர் விளக்கம்

    18 வயதுடைய அண்ணன் தலையில், தம்பி கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Published by:Suresh V
    First published:

    Tags: Crime News, Murder, Theni

    அடுத்த செய்தி