Home /News /tamil-nadu /

மீஞ்சூர் - வண்டலூர்.. ஒரே சாலை... 4 டோல்கேட்... வாகன ஓட்டிகள் கவலை!

மீஞ்சூர் - வண்டலூர்.. ஒரே சாலை... 4 டோல்கேட்... வாகன ஓட்டிகள் கவலை!

இச்சாலையை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். தற்போது பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில், 3 இடங்களில் சர்வீஸ் சாலை அமைக்கும் பணி மட்டும் நடைபெற்று வருகிறது.

இச்சாலையை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். தற்போது பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில், 3 இடங்களில் சர்வீஸ் சாலை அமைக்கும் பணி மட்டும் நடைபெற்று வருகிறது.

இச்சாலையை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். தற்போது பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில், 3 இடங்களில் சர்வீஸ் சாலை அமைக்கும் பணி மட்டும் நடைபெற்று வருகிறது.

    சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வண்டலூரிலிருந்து மீஞ்சூர் வரை அமைக்கப்பட்டுள்ள வெளிவட்ட சாலையில் 4 சுங்கச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டிருப்பது வாகன ஓட்டிகள் இடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், சென்னை மீஞ்சூர் - வண்டலூர் இடையே 58 கி.மீ நீளமுள்ள வெளிவட்ட சாலை இரண்டாயிரத்து 156 கோடி ரூபாய் மதிப்பில் வெளிவட்ட சாலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலையை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். தற்போது பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில், 3 இடங்களில் சர்வீஸ் சாலை அமைக்கும் பணி மட்டும் நடைபெற்று வருகிறது.

    இந்த வெளிவட்ட சாலையில் நாள்தோறும் 30ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த வெளிவட்ட சாலையில் நான்கு இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சாலையில் இதுவரை வாகனங்கள் சுங்கக் கட்டணம் இன்றி பயணித்து வந்த நிலையில், ஜனவரி 2வது வாரத்தில் இருந்து சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    மேலும் படிக்க: தமிழகத்தில் நாளை முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி.. தகுதியானவர்கள் யார்?

    இந்நிலையில், வெளிவட்ட சாலையில் அமைக்கப்பட்டுள்ள 4 சுங்கச்சாவடிகளிலும், நாளை முதல் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபாஸ்டேக் முறையிலும், தனியாகவும் கட்டணம் செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இந்த சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடிகளில் பாஸ்ட்டேக் ஸ்கேனர்கள், சுங்க வசூல் அமைப்புகள், கேமராக்களின் செயல்பாடுகள் சரிபார்க்கப்பட்டுள்ள நிலையில், நாளை முதல் சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வாகனங்கள் செல்லும் போது, அதன் எடையை கணித்து, சென்சார் மூலம் கணக்கிடும் கருவியும் பொருத்தப்பட்டுள்ளது.

    சுங்கச்சாவடிகளில் இருசக்கர வாகனங்களுக்கு தனிவழி, சுமை லாரி, பேருந்துகளுக்கு தனி வழி, 20 டயர்கள் கொண்ட லாரிகள் செல்ல தனி பாதையும் அமைக்கப்பட்டுள்ளது. அவசர ஊர்திகள் மற்றும் விஐபி வாகனங்களுக்கு தனி வழி அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த சுங்கச்சாவடிகளில் அமைக்கப்பட்டிருக்கும் பூத்களில் வெளியாட்கள் யாரும் உள்ளே செல்ல முடியா அளவுக்கு பாதுகாப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. கட்டணம் வசூலித்து முடித்தவர்கள் பூத்தின் மேல் உள்ள படிகட்டுகளின் வழியே சென்று அலுவலகத்தின் வழியாக மட்டும் தான் வெளியே வர முடியும்.

    மொத்தமுள்ள 60 கிலோ மீட்டர் தொலைவுக்கு மின்விளக்கு வசதி, மருத்துவ உதவி மையம், அவசர கால தொலைபேசி வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    அம்பத்தூர் தொழிற்பேட்டை, ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர், திருமுல்லைவாயில் தொழிற் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் தொழிற்சாலைகளுக்கு செல்லும் கனரக வாகனங்கள், இந்த சாலையில் பயணிப்பதால் பயண நேரம் குறையும்.

    எனினும், 58 கி.மீ தூரத்துக்கு 4 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதால், அனைத்திலும் வாகன ஓட்டிகள் கட்டணம் செலுத்த வேண்டுமா என வாகன ஓட்டிகள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே விலைவாசி உயர்வால் மக்கள் அவதிப்பட்டு வருவதால், புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுங்கவசூல் வானக ஓட்டிகளை பாதிக்காமல் இருக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    வண்டலூரிலிருந்து மீஞ்சூர் செல்லும் வழியில் நான்கு சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் வசூலிக்கப்பட்டால், பெரும் சுமையாக அமையும் என்பதே வாகன ஓட்டிகளின் அச்சமாக இருக்கிறது.

    Also read: கொரோனா வைரஸ் கடைசிவரை நம்முடன் தொடர்ந்து பயணிக்கும்.. ஊரடங்கு தேவை இல்லை: WHO தலைமை விஞ்ஞானி
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Chennai, Toll Plaza

    அடுத்த செய்தி