கனமழை எச்சரிக்கை: தமிழகத்தில் உள்ள அணைகளை கண்காணிக்க உத்தரவு!

கனமழை எச்சரிக்கை: தமிழகத்தில் உள்ள அணைகளை கண்காணிக்க உத்தரவு!
கோப்புப்படம்.
  • News18
  • Last Updated: October 5, 2018, 10:27 PM IST
  • Share this:
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இரண்டு தினங்களாக மழை பெய்துவருவதால் தமிழகத்தில் உள்ள நீர் நிலைகளை கண்காணிக்க மத்திய நீர் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது, மேலும் அடுத்த 5 தினங்களுக்கு கன மழை இருக்கும் என்றும் வரும் 7-ம் தேதி கனமழை இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதனைத்தொடர்ந்து, மத்திய நீர் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கன மற்றும் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், அக்டோபர் 7-ம் தேதி மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள நீர் நிலைகளையும், அணைகளின் நீர் இருப்பையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், அதிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளதால் பொன்னை ஆறு,பாலாறு,
கொசஸ்தலை ஆறு உள்ளிட்ட நதிகளின் மீது கூடுதல் கவனம் தேவை எனவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இந்தக் கடிதத்தை மத்திய நீர் வளத்துறை அமைச்சகம், தமிழக தலைமைச் செயலாளருக்கு அனுப்பியுள்ளது.
First published: October 5, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்