Home /News /tamil-nadu /

8 வழிச்சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை.. அமைச்சகம் பதில் மனு..

8 வழிச்சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை.. அமைச்சகம் பதில் மனு..

உச்சநீதிமன்றம்

உச்சநீதிமன்றம்

சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்காக நிலம் கையகப் படுத்த சுற்றுச்சூழல் அனுமதி தேவை இல்லை என்று வனம், சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

நேற்று முன்தினம் வழக்கு விசாரணைக்கு வந்த போது இரண்டு நாட்களில் பதில் அளிப்பதாக சோலிசிட்சர் ஜெனரல் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து நேற்று பதிவாளர் அலுவலகத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2006 அரசாணையின் படி எட்டு வழிச்சாலைத் திட்டத்துக்கு நிலத்தை கையகப்படுத்தும் போது சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது.

Also read... சொந்த ஊரில் அரசு வேலை... உயர்நீதிமன்றம் காட்டம்!

அப்படி கையகப்படுத்தப்படும் நிலத்தை திட்ட செயல்பாட்டுக்காக செப்பனிட்டு, சாலைப் பணிகளை தொடங்கும் முன்பாக சுற்றுச்சூழல் அனுமதியைப்பெற்றால் போதும் என்று சுற்றுச்சூழல் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதிலில் கூறப்பட்டுள்ளது.



இதே வாதத்தை முன்வைத்துத்தான் திட்டத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்துள்ள தடையை நீக்க வேண்டும் என்று மத்திய அரசு மேல் முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு ஆகஸ்ட் 6-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published:

அடுத்த செய்தி