பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸை தைலாபுரம் இல்லத்தில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் சந்தித்து பேசினர். அப்போது தொகுதி பங்கீடு குறித்துப் பேசியதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், 20 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என, தமிழக அரசை பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இவ்விவகாரம் தொடர்பாக பாமக தலைவர் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி ஆகியோர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை அண்மையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும் படிக்க... வேளாண் சட்டங்களை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தவில்லையென்றால் நாங்கள் செய்வோம் - உச்ச நீதிமன்றம் அதிரடி
2021 சட்டமன்ற தேர்தல் பணிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் பரபரப்பாக இயங்கி வருகின்றன. இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரம் இல்லத்தில், பாமக நிறுவனர் ராமதாசை அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதில், வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு பற்றியும், சட்டப்பேரவை தேர்தல் தொகுதி பங்கீடு குறித்தும் பேசியதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.