காட்பாடியில் அரசு மருத்துவமனை வருமா? துரைமுருகனுக்கு பதில் அளித்த அமைச்சர் விஜயபாஸ்கர்

நீலகிரி மாவட்டம் மறைந்த முதல்வர் ஜெயலலிதா தன்னுடைய சொந்த மாவட்டமாக கருதியதாகவும், இந்த அரசு  மலை வாழ் மக்களுக்கான முக்கியத்துவத்தை வழங்கி வருவதாகவும், வரும் காலத்தில் அரசு மருத்துவ கல்லூரியுடன் இணைந்த மருத்துவமனை கொண்டு வர அரசு பரிசீலித்து வருவதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலளித்தார்.

news18
Updated: July 2, 2019, 12:18 PM IST
காட்பாடியில் அரசு மருத்துவமனை வருமா? துரைமுருகனுக்கு பதில் அளித்த அமைச்சர் விஜயபாஸ்கர்
அமைச்சர் விஜயபாஸ்கர்
news18
Updated: July 2, 2019, 12:18 PM IST
காட்பாடி தாலுக்காவில் மருத்துவமனை அமைப்பதற்கான அரசானை விரைவில் பிறப்பிக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது பேசிய எதிர் கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், ஒரு தாலுக்காவுக்கு ஒரு அரசு மருத்துவமனை இருக்க வேண்டும் என்பது தான் அரசின் கொள்கை. அந்த வகையில் கடந்த கூட்டத்தொடரின் போதே கோரிக்கை வைத்ததாகவும், இந்த கூட்டத்தொடரிலாவது அதற்கான அறிவிப்பு வருமா என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், காட்பாடியில் தாலுக்கா மருத்துவமனை அமைப்பதற்கான ஒப்புதலை முதலமைச்சர் வழங்கியுள்ளதாகவும், அதற்கான அரசாணை விரைவில் பிறப்பிக்கப்படும் என உறுதியளித்தார்.

பின்னர் பேசிய ஊட்டி சட்டமன்ற உறுப்பினர் கணேஷ் , முதல்வர் தொகுதியில் மட்டும் நாள்தோறும் ஏதாவது திட்டம் அறிவிக்கப்படுகிறது என்றும் நீலகிரி மாவட்டத்தின் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு  குறைந்தபட்சம் ஒரு மருத்துவமனையோ அல்லது மருத்துவக்கல்லூரியோ அமைத்து தர முடியுமா என கேள்வி எழுப்பினார்.

நீலகிரி மாவட்டம் மறைந்த முதல்வர் ஜெயலலிதா தன்னுடைய சொந்த மாவட்டமாக கருதியதாகவும், இந்த அரசு  மலை வாழ் மக்களுக்கான முக்கியத்துவத்தை வழங்கி வருவதாகவும், வரும் காலத்தில் அரசு மருத்துவ கல்லூரியுடன் இணைந்த மருத்துவமனை கொண்டு வர அரசு பரிசீலித்து வருவதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலளித்தார்.

Also see...

First published: July 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...