விராலிமலை தொகுதியில் நீண்ட போராட்டத்திற்கு பின் அமைச்சர் விஜயபாஸ்கர் 23,644 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணி நேற்று தொடங்கியது. 234 தொகுதிகளுக்கான முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் போட்டியிடும் விராலிமலை தொகுதியில் குளறுபடி நடைபெறுவதாக புகார் தெரிவித்து வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது.
Also Read : அதிமுக-வின் 11 அமைச்சர்கள் தோல்வி... 16 அமைச்சர்கள் வெற்றி - முழு விவரம்
இதனால்
விராலிமலை தொகுதியில் இரவு முழுவதும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இன்று காலை வரை வாக்கு எண்ணிக்கை பணி நடைபெற்ற நிலையில் இறுதியாக அமைச்சர் விஜயபாஸ்கர் 23,644 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டன்ற தேர்தலில் திமுக 159 இடங்களையும், அதிமுக 75 இடங்களையும் கைப்பற்றி உள்ளது. 10 வருடங்களுக்கு பின் திமுக மீண்டும் ஆட்சியமைக்க உள்ள நிலையில் கொரோனா தொற்று காரணமாக
பதவியேற்பு விழா எளிமையாக நடைபெறும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.