உலக நாடுகள் கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக தமிழ்நாட்டிடம் ஆலோசனை கேட்பது பெருமைக்குரியது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் இயங்கிவரும் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அலுவலகத்தில் சுகாதாரத் துறை அலுவலர்களுக்கான நவீன உடற்பயிற்சிக் கூடத்தை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.
ஆண் பெண் இருபால் பணியாளர்களும் பயன்பெறும் வகையில் சுழற்சி முறையில் காலை மாலை என இரு வேளைகளிலும் பயன்படுத்தும் வகையில் நவீன உடற்பயிற்சிக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் பிரேசில், சீனா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, ரஷ்யா, ஆகிய நாடுகள் கலந்துகொண்ட காணொளி வாயிலான கருத்தரங்கில் தமிழகத்தில் கொரோனா தொற்றை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாகவும் உலக நாடுகள் கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக தமிழ்நாட்டிடம் ஆலோசனை கேட்ப்பது பெருமைக்குரியது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
கொரோனா தடுப்பு மருந்தின் முதற்கட்ட பரிசோதனையில் வெற்றியடைந்துள்ளதாக கூரிய அமைச்சர் இரண்டாம் கட்ட பரிசோதனை 6 மாதம் கழித்து செய்யப்படும் என்றும் கூடிய விரைவில் கொரோனாவிற்க்கான தடுப்பு மருந்து கிடைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
Also read... கோவையில் முதல்வரை வரவேற்பதற்காக குவிந்த வாகனங்கள்.. போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ்..
கொரோனோ தொற்று ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவுவதை பெரிதும் தடுத்துளதாக கூரிய அவர், முக கவசம் அணியாத 10 லட்சம் நபர்களுக்கு இதுவரை அபராதம் விதித்துள்ளதாகவும், நாளுக்கு நாள் கொரோனா தொற்று குறைந்து வருவதால் பொதுமக்கள் கொரோனா பரவல் தமிழகத்தில் இல்லை என்று எண்ணி, அலட்சியமாக இருக்க வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் மழை காலங்களில் ஏற்படும் மலேரியா உள்ளிட்ட நோய்கள் கடந்த ஆண்டுகளை விட இந்தாண்டு 15 % குறைந்துள்ளதாக கூரிய அவர், பருவ மழை காலங்களிலும் பொதுமக்கள் தங்களை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுகொண்டார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Minister Vijayabaskar