தயவுசெய்து ஒத்துழைப்பு கொடுங்கள். அரசு முழுவீச்சுடன் இயங்குகிறது..! - அமைச்சர் விஜயபாஸ்கர்

தனியார் மருத்துவமனைகளிடமும் படுக்கைகளை தயார் செய்யும் நடவடிக்கைகளுக்கு முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். முதல்வர் தேவையான அறிவுரைகளை தினமும் வழங்கிவருகிறார்” என்றார்.

தயவுசெய்து ஒத்துழைப்பு கொடுங்கள். அரசு முழுவீச்சுடன் இயங்குகிறது..! - அமைச்சர் விஜயபாஸ்கர்
அமைச்சர் விஜயபாஸ்கர்
  • Share this:
ஊரடங்கை மதித்து தயவுசெய்து ஒத்துழைப்பு தாருங்கள், தமிழ்நாடு அரசு முழுவீச்சுடன் இயங்கி வருகிறது என மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார் தமிழக சுகாதாரத் அமைச்சர் விஜயபாஸ்கர்.

சென்னையில் நேற்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்திந்தபோது, “கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெரிய வசதிகள் கொண்ட உலக நாடுகளுக்கே சவாலாக இருக்கும் கொரோனா வைரஸின் வேகமான பரவலை எதிர்த்து போராடவேண்டியுள்ளது. ஓமந்தூரார் மருத்துவமனையில் 500 படுக்கைகள் தயாராக உள்ளன. தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு மருத்துவமனையில் தனியாக கொரோனா வார்டுகள் என பிரத்யேகமாக அமைத்து வரப்படுகின்றன.

ஒவ்வொரு தனிநபரும் தயவுசெய்து மத்திய, மாநில அரசுகளின் அறிவிப்புக்கு ஒத்துழைப்பு தாருங்கள். பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே இந்த சூழலை நம்மால் எதிர்கொள்ளவும், கையாளவும் முடியும். தமிழகத்தில் அரசு சார்பில் 15,000 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. தனியார் மருத்துவமனைகளிடமும் படுக்கைகளை தயார் செய்யும் நடவடிக்கைகளுக்கு முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். முதல்வர் தேவையான அறிவுரைகளை தினமும் வழங்கிவருகிறார்” என்றார்.


இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும் இதுவரை கொரோனா பாதிப்பால் 27 பேர் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
First published: March 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading