இருமொழிக்கொள்கை குறித்து பேசும் எதிர்க்கட்சிகள் உலகத் தமிழ் மாநாட்டை நடத்தாதது ஏன்? அமைச்சர் விஜயபாஸ்கர் கேள்வி..

இருமொழிக்கொள்கை குறித்து பேசும் எதிர்க்கட்சிகள் உலகத் தமிழ் மாநாட்டை நடத்தாதது ஏன்? அமைச்சர் விஜயபாஸ்கர் கேள்வி..
அமைச்சர் விஜயபாஸ்கர் (கோப்புப் படம்)
  • News18
  • Last Updated: September 16, 2020, 1:23 PM IST
  • Share this:
இருமொழி கொள்கை குறித்து பேசி வரும் எதிர்கட்சிகள் உலக தமிழ் மாநாட்டை நடத்தாது ஏன் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று நேரமில்லா நேரத்தில் புதிய கல்வி கொள்கை தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் பல்வேறு கருத்துக்களை சுட்டிக்காட்டிப் பேசினார். அப்போது இன்று அவையில் உறுப்பினர்களின் மேஜையில் வைக்கப்பட்டுள்ள மருத்துவ புத்தகத்தில் மூலிகைகளின் பெயர்கள் இந்தியில் இடம்பெற்றிருப்பது தொடர்பாக கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், 122 பக்கங்கள் கொண்ட அந்த மருத்துவ புத்தகத்தில் ஒரு வார்த்தைக்கூட இந்தி மொழியில் இடம்பெறவில்லை என்றும், மருத்துவக் குணங்களை கொண்ட மூலிகைகளின் பெயர்களை, மற்ற மாநிலங்களும் அறிந்துகொள்ளும் விதமாக இந்தி பெயர்கள் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


மேலும், மருத்துவ புத்தகம் மத்திய அரசின் ஆயூஸ் அமைச்சகத்தின் நிதியின்கீழ், தேசிய நலவாழ்வு மையத்திலன் நிதிஉதவியுடன் அச்சிடப்பட்டதால், இந்தி பெயர்கள் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டுள்ளதாக விளக்கமளித்தார்.

மேலும், இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாகவும், இரண்டு உலகத் தமிழ் மாநாட்டை அ.தி.மு.க. அரசு நடத்தியதாகவும், தி.மு.க. தலைமையில் ஒரு உலகத் தமிழ்நாடு கூட நடத்தப்படவில்லை என்று தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட எதிர்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், புத்தகத்தில் இந்தி பெயர் அச்சிடப்பட்டுள்ளது என்ற ஒரு ஐயத்தில் தான் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். அதற்கு அமைச்சரும் பதிலளித்துவிட்டார். இப்போது ஏன் உலக தமிழ் மாநாடு நடத்தினீர்களா என எங்களை வம்புக்கு அழைக்கிறீர்கள் என தெரிவித்தார்.
First published: September 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading