நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு கோரி எழுதிய கடிதத்திற்கு பதில் வரவில்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்

நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு கோரி எழுதிய கடிதத்திற்கு பதில் வரவில்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்

அமைச்சர் விஜயபாஸ்கர்

நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தமிழக அரசு எழுதிய கடிதத்திற்கு மத்திய அரசிடமிருந்து பதில் வரவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

  • Share this:
சென்னை எழும்பூரில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர், கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் உணவுகள், மருந்துகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கும் கர்ப்பிணி பெண்களுடன் காணொளி காட்சி மூலம் உரையாடினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மகப்பேறு மருத்துவமனைகளில் கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், எழும்பூர் மருத்துவமனையில்  400 கர்ப்பிணிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அதில் 374 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

எழும்பூர் மருத்துவமனையில் 12 சதவிகிதம் பிறந்த குழுந்தைகளுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருப்பதாகவும், கடந்த மூன்று மாதங்களில் இங்கு உயிரிழப்புகள் எதும் இல்லை என தெரிவித்தார்.

தமிழகம் முழுவமும் 1606 கர்ப்பிணி பெண்கள் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதில் 1104 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவித்த அவர், கொரோனா தொற்று இல்லாத கர்ப்பிணிகளுக்கு தனி படுக்கைகள், தனி வழி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

Also read... கொரோனா சிகிச்சை முடிந்த முதல் நாளே பொதுநிகழ்ச்சிக்கு வந்த அமைச்சர்... அதிகாரிகள் கலக்கம்

கொரோனாவுக்கு அளிக்கப்பட்டு வரும் சித்தா, ஆயுர்வேதா போன்ற பிற சிகிச்சைகளில் ப்ளாஸ்மா சிகிச்சை மட்டும்  வெற்றிகரமாக செயல்படுவதாகவும், முதியவர்களுக்கான பிசிஜி தடுப்பு மருந்து சோதனை அளவில் இருப்பதாக தெரிவித்தார்.

மேலும், நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தமிழக அரசு எழுதிய கடிதத்திற்கு மத்திய அரசிடமிருந்து பதில் வரவில்லை என்றும் தெரிவித்தார்.
Published by:Vinothini Aandisamy
First published: