முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பண்டிகை காலமாக இருப்பதால் குழந்தைகள், முதியவர்களை பொதுவெளிகளுக்கு அழைத்து செல்ல வேண்டாம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

பண்டிகை காலமாக இருப்பதால் குழந்தைகள், முதியவர்களை பொதுவெளிகளுக்கு அழைத்து செல்ல வேண்டாம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இதுவரை 115 சிடி ஸ்கேன்கள் அமைக்கப்பட்டுள்ளது என கூறிய அவர், மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி மாநிலமாக இருப்பதாக பிரதமர் பாராட்டியதாகவும் தெரிவித்தார்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

பண்டிகை காலமாக இருப்பதால் குழந்தைகள் மற்றும் முதியவர்களை கடைவீதி, பொதுவெளிகளுக்கு அழைத்து செல்ல வேண்டாம் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் 4கோடி மதிப்பிலான மிகத்துள்ளியமாக படம் எடுக்கும் சிடி ஸ்கேன் கருவியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கிவைத்து பார்வையிட்டார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் இதுவரை 8 சிடி ஸ்கேன் கருவிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அதிநவீன சி.டி. ஸ்கேன் கருவி மூலம் இருதயம் மற்றும் இருதய ரத்த நாளங்களை 1 நிமிடத்தில் துள்ளியமாக படம் எடுக்க முடியும் எனவும், தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் இதுவரை 64,193 குழந்தைகள் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் இதுவரை 1,100 குழந்தைகளுக்கு கொரோனா சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.

Also read... இட ஒதுக்கீடு போலவே ஏழு பேர் விடுதலையிலும் மகிழ்வானது நடக்கும்... அமைச்சர் உதயக்குமார்!

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இதுவரை 115 சிடி ஸ்கேன்கள் அமைக்கப்பட்டுள்ளது என கூறிய அவர், மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி மாநிலமாக இருப்பதாக பிரதமர் பாராட்டியதாகவும் தெரிவித்தார்.

மேலும், பண்டிகை காலமாக இருப்பதால் குழந்தைகள் மற்றும் முதியவர்களை கடைவீதி, பொதுவெளிகளுக்கு அழைத்து செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தினார். கொரோனா தொடர் கண்காணிப்பு மையம் இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழக அரசு மருத்துவமனையில் தான் துவங்கப்பட்டது. அதில் நோயாளிகளின் பல்வேறு பிரச்சினைகள் கண்டறிந்து தீர்வு கானப்பட்டு வருகிறது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தொடர் கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Minister Vijayabaskar