ஆண்டிப்பட்டி எங்களுக்கு ஸ்பெஷல் தொகுதி... பேரவையில் அமைச்சர் வேலுமணி பேச்சு!

அமைச்சர் வேலுமணி (கோப்புப் படம்)

  • Share this:
தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நின்ற தொகுதி என்பதால், எப்போதுமே அது எங்களுக்கு ஸ்பெஷல் என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரைவயில், கேள்வி நேரத்தில் பேசிய ஆண்டிப்பட்டி தொகுதி திமுக உறுப்பினர் மகாராஜன், கூட்டத் தொடர் துவங்கிய நாளில் இருந்து ஒரு விஷயத்தை வலியுறுத்தி வருகிேறன். ஆண்டிப்பட்டி தொகுதியில் குடி தண்ணீர் பிரச்னை  தலைவிரித்தாடுகிறது.

குடிநீரில் கழிவு நீர் கலந்து வருகிறது. குடிக்கவே தண்ணீர் இல்லாத போது, கைகளை கழுவ தண்ணீருக்கு எங்கே போவது?’’ என ஆவேசமாக கேள்வி எழுப்பிய மகாராஜன், ‛‛எம்.ஜி.ஆர்.,, ஜெயலலிதா நின்ற தொகுதி ஆண்டிப்பட்டி. முக்கியத்துவம் வாய்ந்த இந்த தொகுதியில் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க, கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வர வேண்டும்’’ என்றார்.

இதற்குபதிலளித்த உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி,தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி தொகுதி எப்போதுமே எங்களுக்கு ஸ்பெஷல் தான். எம்.ஜி.ஆரும்., மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும் போட்டியிட்ட தொகுதி அது.

அதனால், பல திட்டங்களை அந்தத் தொகுதியில் நிறைவேற்றி வருகிறோம். திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டத்தில் மட்டும் அதிகளவு மழை பொழிவு இல்லாத தால் நிலத்தடி நீர் மட்டம் உயரவில்லை. இதனால் தண்ணீர் பற்றாக்குறை இருக்கிறது. இதை வெற்றிகரமாக சமாளித்து வருகிறோம்’’ என்றார்.

Also see...
Published by:Vinothini Aandisamy
First published: